ஹத்ராஸ் சம்பவம்! கண்டு கொள்ளாத பிரதமர்! ராகுலை தாக்கும் ஸ்மிருதி இராணி!

06 October 2020 அரசியல்
modimay3.jpg

ஹத்ராஸ் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்ட பெண் ஒருவர், மேல்தட்டு வகுப்பினரால் கற்பழிக்கப்பட்டு, போலீசாரால் எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த நிகழ்வால், எதிர்கட்சிகள் தற்பொழுது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி, ப்ரியங்கா காந்தி உள்ளிட்டோர் ஹத்ராஸ் சென்று, அங்கு பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணின் குடும்பத்தாரை சந்தித்து, ஆறுதல் கூறினர். அந்தப் பெண்ணிற்கும், பாதிக்கப்பட்டு உள்ள குடும்பத்தாருக்கும் உரிய நீதி வேண்டும் என, இந்தியாவின் பல மாநிலங்களில் காங்கிரஸ் உள்ளிட்டப் பல கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

மத்தியில் ஆளும் பாஜகவின் ஆட்சி தான், உத்திரப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்று வருகின்றது. அந்த மாநிலத்தில் தொடர்ந்து, பல நூறு முறை இப்படிப்பட்ட பாலியல் பலாத்கார சம்பவங்கள் அரங்கேறி விட்டன. இருப்பினும், இது குறித்து எவ்வித நடவடிக்கைகளையும் ஆளும் யோகி ஆதித்யநாத்தின் அரசு எடுக்கவில்லை என்பது, தொடரும் இப்படிப்பட்டக் குற்றங்களால் தெரிகின்றது. பெண்களுக்கு நம் ஆட்சியில் பாதுகாப்பு உள்ளது எனக் கூறும் பிரதமர் கூட, இந்த சம்பவம் குறித்து, வாய் திறக்கவே இல்லை.

மற்ற அனைத்து விஷயங்களுக்காகவும் வாய் திறக்கும், பாஜகவின் பெண் தலைவர்களான ஸ்மிருதி இராணி, நிர்மலா சீதாராமன், மேனகா காந்தி உள்ளிட்டோர், ஒரு பெண் பலாத்காரம் செய்யப்பட்டு, கொல்லப்பட்டு உள்ளதற்கு வாய் திறக்கவே இல்லை. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, பஞ்சாபில் விவசாயிகள் நடத்தி வருகின்ற போராட்டத்தில் கலந்து கொண்டு உள்ளார்.

அவர் அந்தப் போராட்டத்தில், டிராக்டரில் அமர்ந்து கலந்து கொண்டார். அது பற்றி, தற்பொழுது வாய் திறந்துள்ளார் ஸ்மிருதி இராணி. அவர் பேசுகையில், ராகுல் காந்தி ஒரு விஐபி விவசாயி. சோபாவில் அமர்ந்து தான், டிராக்டரில் அமர்ந்து வருவார். அவர் போன்றவர்களால், விவசாயிகள் நன்றாக வாழ்வதைப் பார்க்க இயலாது. அதனால் தான் அவர் இவ்வாறு போராடுகின்றார் எனக் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS