ஹத்ராஸ் மாவட்டத்தில், பெண் கொலை செய்யப்பட்ட பிரச்சனையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்களுக்குப் பலவிதக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
உத்திரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தினைச் சேர்ந்த 19 வயதான பட்டியலினத்தினைச் சேர்ந்த பெண் ஒருவர், மேல்தட்டுப் பிரிவினரைச் சேர்ந்த 4 நபர்களால் கடத்தி கற்பழிக்கப்பட்டார். பின்னர், அந்தப் பெண்ணை அவர்கள் கொலை செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக, இந்தியா முழுவதும் பல எதிர்ப்புகள் எழுந்தன. இறந்தப் பெண்ணின் உடலினைக் கைப்பற்றியப் போலீசார், அவசர அவசரமாக எரித்துள்ளனர் எனவும் குற்றம் சுமத்தப்பட்டது.
இந்த சம்பவமும், போலீசாரின் செயலும் நாடு முழுவதும் பெரிய அளவிலான எதிர்ப்பினை கிளப்பியுள்ளது. நேற்று முன் தினம், காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களான ராகுல் காந்தியும், ப்ரியங்கா காந்தியும் உத்திரப் பிரதேசத்தில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால், அவர்கள் நடைபயணமாக, ஹத்ராஸ் செல்ல முயன்றனர். இருப்பினும், ஹத்ராஸ் மாவட்டத்தில் அவசர அவசரமாக 144 தடை விதிக்கப்பட்டது.
போலீசாரின் பேச்சினை ராகுல் காந்தி கேட்கவில்லை. தொடர்ந்து நடக்க ஆரம்பித்தார். இதனால், அவர் கீழே போலீசாரல் தள்ளிவிடவும் செய்யப்பட்டார். அவரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தாருக்குப் பலவித கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதிக்கப்பட்ட பெண்ணின் கிராமமே, போலீசாரால் சீல் செய்யப்பட்டு உள்ளது.
பாதிக்கப்பட்டு உள்ள கிராமத்திற்குள், ஊடகங்கள் நுழைய அனுமதிக்கவில்லை. மேலும், அப்பெண்ணின் குடும்பத்தாருக்கு போன் செய்து பேசவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும், அக்குடும்பத்தாரின் போன்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளதாகவும் பல செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு, உத்திரப் பிரதேசத்தினை ஆளும் யோகியின் அரசேக் காரணம் என, எதிர்கட்சிகள் கடும் குற்றம்சாட்டி வருகின்றனர்.