ஹீலர் பாஸ்கருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது!

24 March 2020 அரசியல்
healerbaskar.jpg

சுகாதாரத்துறையினை கடுமையாக விமர்சித்து இருந்த ஹீலர் பாஸ்கருக்குத் தற்பொழுது ஜாமீன் வழங்கி, கோயம்புத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலுமினாட்டிகள், உலக அரசியல், உலகப் பொருளாதாரம், நாட்டு மருத்துவம் உள்ளிட்டப் பலப் பிரிவுகளைப் பற்றி, தன்னுடைய வீடியோ பதிவுகள் மூலம் பொதுமக்கள் மத்தியில், பிரபலமடைந்தவர் ஹீலர் பாஸ்கர்.

இவர் கொரோனா வைரஸ் பாதிப்புக் குறித்து, கடந்த சில நாட்களாக வீடியோ பதிவுகளை வெளியிட்டு வந்தார். அதில், கொரோனா வைரஸ் பற்றியும், சுகாதாரத்துறையினைப் பற்றியும் கடுமையாக விமர்சித்து வந்தார். இதனால், அவர் மீது தமிழக அரசு வழக்குத் தொடர்ந்தது. பொதுமக்களிடம், தேவையற்ற வதந்திகளைப் பரப்புவதாகவும், சுகாதாரத்துறையினை தவறாகப் பேசியதற்காகவும், அவர் கைது செய்யப்பட்டு கோயம்புத்தூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், இன்று காலையில் அவருக்கு ஜாமீன் வழங்கி, கோயம்புத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதனால், அவர் விரைவில் சிறையிலிருந்து வெளியில் வர உள்ளார்.

Recommended Articles

HOT NEWS