மஹாராஷ்டிராவில் பெய்து வருகின்ற கனமழையால், மும்பை உள்ளிட்டப் பெருநகரங்கள் தற்பொழுது வெள்ளத்தில் மூழ்கி உள்ளன.
மஹாராஷ்டிராவின் மும்பை உள்ளிட்டப் பகுதிகளில், அடுத்த 2 நாட்களுக்கு கடுமையான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, மும்பை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதனைப் போலவே, கடந்த 2 நாட்களாக மும்பை நகரில் கடுமையான மழைப் பெய்து வருகின்றது. தென்மேற்குப் பருவமழைத் தொடங்கியுள்ள நிலையில், இந்த மழையால், மும்பை மாநகரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது.
இதனால், அங்கு 16.5 செமீ அளவிற்கு மழைப் பதிவாகி உள்ளது. மும்பையின் முக்கியப் பகுதிகளான, தாதர், சயான், ஒர்லி உள்ளிட்டப் பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேலும், இந்த மழையானது நாளை வரை நீடிக்கும் என்பதால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.