காட்டுத் தீயினைத் தொடர்ந்து கனமழை! திணறும் ஆஸ்திரேலியா!

10 February 2020 அரசியல்
australiarain.jpg

கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக, ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளில், காட்டுத் தீயானது பல கோடி உயிர்களை பறித்துள்ளது. இதனால், பலரும் தங்களுடைய வீடுகளை இழந்து தவிரத்து வருகின்றனர். இந்நிலையில், தற்பொழுது கன மழையினால் அந்நாட்டு மக்கள் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர்.

புதர் தீ என அழைக்கப்பட்ட தீயின் காரணமாக, சுமார் 100 கோடிக்கும் அதிகமான உயிரினங்கள் அழிந்ததாக, ஆஸ்திரேலிய நாட்டுச் செய்தி நிறுவனங்கள் கூறி வருகின்றன. இந்நிலையில், அந்த தீயின் அளவானது தற்பொழுது குறைந்துள்ளது. இதனையடுத்து, அந்நாட்டில், கடந்த நான்கு நாட்களாக, கனமழை பெய்து வருகின்றது.

இதனால், அந்நாட்டின் சிட்னி நகரில் பெய்த பேய் மழையின் காரணமாக, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையானது பாதிக்கப்பட்டு உள்ளது. கடந்த நான்கு நாட்களாக பெய்த மழையின் காரணமாக, சிட்னி நகரமே, வெள்ளத்தில் மிதக்கின்றது. நகரப் பகுதிகளைத் தவிர்த்து, பிற கிராமப் பகுதிகளில் வெள்ளத்தின் காரணமாக, மின்சாரம் தடை செய்யப்பட்டு உள்ளது.

கடந்த முப்பது வருடங்களில் இல்லாத அளவிற்கு, கன மழைப் பெய்துள்ளதாக, ஆஸ்திரேலியா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மழையின் காரணமாக, 391.8 மிமீ மழை பதிவாகி இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மழையினால், காட்டுத் தீயானது பெரும்பான்மையாக, சிட்னிப் பகுதிகளில் இல்லை எனவும், பொதுமக்கள் வெளியே வரக் கூடாது எனவும், அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.

மீட்பு பணியில் ஈடுபட, ஆஸ்திரேலியாவின் பல குழுக்கள் இறங்கியுள்ளன. தொடர்ந்து, மழையின் அளவினை, நிலைமையையும் ஆஸ்திரேலிய அரசாங்கமும், இராணுவமும் கவனித்து வருகின்றது.

HOT NEWS