தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் எல்லாம் மழை பெய்யலாம்! வானிலை ஆய்வு மையம் தகவல்!

17 November 2019 அரசியல்
rainy.jpg

தமிழகத்தில் தற்பொழுது, வடகிழக்கு பருவமழைப் பெய்து வருகின்றது. இதனையடுத்து, தமிழகத்தின் பல்வேறுப் பகுதிகளில் அவ்வப்பொழுது, மழை பெய்து வருகின்றது. குறிப்பாக, தேனி பகுதிகளில் நல்ல மழைப் பெய்து வருகின்றது. இதனால், வைகை ஆற்றின் தொடக்கப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

கரையோரத்தில் தங்கியுள்ளவர்கள், உடனடியாக வெளியேறவும் காவலர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை மைய இயக்குநர், வெப்ப சலனத்தின் காரணமாக இன்றும் நாளையும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார்.

மேலும், தமிழகத்தின் நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தரும்புரி, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி, சிவகங்கை உட்பட 11 மாவடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது. சென்னை மாவட்டமானது, மழையில்லாமல் இருந்தாலும், மேகமூட்டத்துடன் காணப்பட வாய்ப்புள்ளது என குறிப்பிட்டுள்ளது.

தற்பொழுது தான், கியார் புயல் மற்றும் புல்புல் புயல்கள் கடந்துள்ள நிலையில், சராசரியாகப் பெய்ய வேண்டிய மழையினை விட, இந்த பருவத்தில் குறைந்த அளவே மழையின் அளவுப் பதிவாகி உள்ளது.

HOT NEWS