நிறுவனங்களின் குறியீடுகளும், அதிலுள்ள சுவாரசியமான உண்மைகளும்!

01 July 2019 தொழில்நுட்பம்
ஆப்பிள் apple.jpg

ஆப்பிள் நிறுவனத்தின் குறியீட்டிற்குப் பல கதைகள் உண்டு. ஆனால், உண்மையில் அதனை உருவாக்கியவர்கள் மிக சுலபமான விளக்கத்தை அளித்தனர். இது கடித்த நிலையில் இருக்கக் காரணம், அது பார்க்க ஆப்பிள் என பார்த்ததும் நாம் அறிய வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு உருவாக்கப்பட்டது என விளக்கம் அளித்துள்ளனர்.

பின்டிரஸ்ட்

இதன் குறியீட்டைப் பாருங்கள். உங்களுக்கேப் புரியும். பெயருக்கு ஏற்றவாறு, இதன் முதல் எழுத்து P-யானது சிவப்பு நிறப் பின்னைப் போல இருக்கும்.

இதன் வேலையும் பிடித்திருக்கும் விஷயங்களை "பின்" செய்து வைத்துக் கொள்ளுவதே ஆகும். இதனை மிக நுணுக்கமாக யோசித்து வடிவமைத்துள்ளனர் என்றேக் கூற வேண்டும்.

டொயோட்டா

இது உலகப் பெற்ற ஒரு வாகனத் தயாரிப்பு நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தின் குறியீட்டைப் பார்த்தால் உங்களுக்கு சாதாரணமாக ஒன்றும் புரியாது.

ஆனால், அதில் அந்நிறுவனத்தின் பெயரையே ஒளித்து வைத்துள்ளனர். அதனை நீங்களேப் பாருங்கள்.

பீட்ஸ்

இதுப் உலகப்புகழ் பெற்ற ஹெட்போன் தயாரிக்கும் நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் பிற இசை சம்பந்தப்பட்டப் பொருட்களையும் தயாரிக்கிறது.

இதன் குறியீட்டைப் பார்த்தால் சாதாரண "b"-யைப் போல இருக்கும். அதற்கு அருகில் ஒரு ஸ்மைலியை வரைந்து பாருங்கள் உங்கள் கண்களுக்கு அது ஹெட்போனை மாட்டியிருப்பது போல இருக்கும்.

விக்கிப்பீடியா

இதனைப் பயன்படுத்தாதவர்கள் இன்றைய இணைய உலகில் இல்லை என்றேக் கூறலாம். அந்த அளவிற்கு இது மிகப் பயனுள்ள ஒரு வலைதளம் ஆகும். இதில் நமக்குத் தேவையான அனைத்து விஷயங்களுமே விரிவாக விவரிக்கப்பட்டிருக்கும். அதன் குறியீட்டை 2010-ல் தான் சரிசெய்தனர். இதைப் பார்த்தால் உலக உருண்டையை "PUZZLE" மூலமாக குறிப்பிட்டிருப்பர்.

அதில் பல மொழிகளும் இடம் பெற்றிருக்கும். இதிலுள்ள மிக முக்கியமான விஷயமே அது முழுமையடையாமல் இருக்கும். அதற்குக் காரணம் ஒன்றே அதை நம் கல்வி முறைப்படிக் கூறினால் "கல்விக் கரையில கற்பவர் நாள் சில என்பதே".

F1

இதனை நாம் அதிகமாக செய்திகளில் மட்டுமேப் பார்த்திருப்போம். நம் நாட்டில் இதுப் பிரபமில்லை என்றாலும். வளர்ச்சியடைந்த நாடுகளில் இதன் மதிப்பே தனி. யார் மிக வேகமாகச் செல்லும் காரைத் தயாரிக்கின்றனர் எனக் கார் தயாரிக்கும் நிறுவனங்களுக்கிடையே நடக்கும் போட்டியே இந்த கார் பந்தயம் ஆகும். அதன் குறியீட்டை நீங்கள் உற்றுப் பார்த்தால் வேகத்தை தெளிவாக விளக்கியிருப்பர்.

ஹீண்டாய்

இதன் குறியீட்டைப் பார்த்தால் நமக்கு நன்றாகத் தெரிவது "H" என்ற எழுத்து. ஆனால், இதனை நாம் நன்றாக உற்று நோக்கினால் இதன் அர்த்தம் தெளிவாகப் புரியும். இதில் உற்பத்தியாளர் வாடிக்கையாளருடன் கைக்குலுக்குவது போன்று இருக்கும்.

இந்த விஷயத்தைப் பற்றி சில மாதங்களுக்கு முன்னரே ஹீண்டாய் நிறுவனம் விளக்கியது. இதுப் பார்த்த அனைவரையும் அதிர்ச்சியிலும் அதே சமயம் வாயைப்பிளக்கவும் வைத்தது.

HOT NEWS