மரணத்திற்குப் பின் தான் சட்டம் அமல்படுத்தப்படுமா? உயர்நீதிமன்றம் கேள்வி!

29 October 2019 அரசியல்
highcourt.jpg

ஒரு உயிர் பின் தான் சட்டத்தினை அமல்படுத்துவீர்களா என, உயர்நீதிமன்றம் தமிழக அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது.

திருச்சி 2 வயது குழந்த சுஜித் மரணமடைந்ததை அடுத்து, மறைந்த அப்துல்கலாமின் ஆலோசகராக இருந்த பொன்ராஜ் பொதுநல வழக்கினை தாக்கல் செய்தார். அதில், இந்தியாவிடம் ஆறு விதமான தொழில்நுட்பங்கள் இருப்பதாகவும், அவைகளில் ஒன்றினைப் பயன்படுத்தி குழந்தையை மீட்டு இருக்கலாம் எனவும் ஆனால், அதனை செய்யவில்லை எனவும் கூறியிருந்தார்.

மேலும், 2010ல் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் படி, தமிழக அரசு 2015ம் ஆண்டு ஆழ்துளைக் கிணறு ஒழுங்குபடுத்தும் சட்டத்தினை கொண்டு வந்தது. ஆனால், அதனை அரசு அதிகாரிகள் முழுமையாக பின்பற்றவில்லை எனக் குற்றம் சாட்டியிருந்தார்.

இதனை ஏற்றுக் கொண்ட உயர்நீதிமன்றம், அவசராக வழக்காக விசாரித்தது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள், ஒவ்வொரு முறையும் யாராவது உயிரிழந்தால் தான், சட்டத்தை அமல்படுத்துவீர்களா, ஆழ்துளை கிணறுகள் அமைப்பதற்காக வழங்கப்பட்ட அனுமதி குறித்த ஆவணங்கள் எங்காவது பராமரிக்கப்படுகின்றனவா? இதுவரை மாநிலம் முழுவதும் எத்தனை ஆழ்துளை கிணறுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது? தோண்டப்பட்டு, பயன்படுத்தப்படாமல் இருக்கும் ஆழ்துளை கிணறுகள் எத்தனை? மாநில அரசு வகுத்த விதிமுறைகளை மீறியவர்கள் எத்தனைபேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது?" என நீதிபதிகள் கேள்விகளை எழுப்பினர்.

மேலும், சுபஸ்ரீ மரணம் அடைந்ததும் பேனர் தொடர்பான சட்டத்தையும், சுர்ஜித் மரணம் அடைந்ததும் ஆழ்துளை கிணறு சட்டத்தையும், சிறிது காலம் அமல்படுத்தப்படுகிறது. பிறகு, அவற்றை யாரும் கண்டுகொள்வதில்லை. அரசு கொண்டு வந்த விதிகள் பின்பற்றப்படுகிறதா என, அதிகாரிகள் யாரும் எந்த ஆய்வும் செய்வதில்லை என்றும் நீதிபதிகள் கூறினர். மேலும் பேசிய அவர்கள், இது குறித்து வரும் நவம்பர் 21ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

HOT NEWS