எல்லையில் படைகளை குவிக்கும் சீனா! தொடரும் போர் பதற்றம்!

26 May 2020 அரசியல்
chinesearmy.jpg

சீனா தன்னுடைய இராணுவத்தினைத் தொடர்ந்து, இந்தியாவின் எல்லையில் குவித்து வருவதால், போர் பதற்றம் அதிகரித்து உள்ளது.

கடந்த வாரம் லடாக் பகுதியில், இந்திய இராணுவத்தினரும் சீன இராணுவத்தினரும் கை களப்பில் ஈடுபட்டனர். இந்த சூழ்நிலையில், இரு நாட்டு உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் நடத்தியப் பேச்சுவார்த்தையினைத் தொடர்ந்து, இந்தப் பிரச்சனை முடிவிற்கு வந்தது. இந்த நிலையில், தற்பொழுது சீன இராணுவம் தன்னுடையப் படைகளை லடாக் பகுதியில் குவித்துக் கொண்டே உள்ளது.

இந்நிலையில், அவர்களை சமாளிக்கும் விதமாகவும், பாதுகாப்பு கருதியும் இந்தியாவும் தன்னுடையப் படைகளை, சீனாவிற்கு எதிராக லடாக் பகுதிகளில் குவித்து வருகின்றது. பொதுவாக, அங்கு நிலவுகின்ற சூழ்நிலைகள் காரணமாக, அதிகளவிலான படைகளை ஒரு குறிப்பிட்டக் காலத்திற்குள் அழைத்துச் சென்று நிறுத்துவது கடினமான செயலாகும்.

எனவே, தற்பொழுது இந்தியா தன்னுடைய பறக்கும் ட்ரோன்கள் மூலம், எல்லைப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன. மேலும், இந்தியாவின் இராணுவமும் கொஞ்சம் கொஞ்சமாக அந்தப் பகுதியில் குவிக்கப்பட்டு வருகின்றன. மிகவும் சிக்கலானப் பகுதியான அங்கு செல்வதற்காக, பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தக் காலக் கட்டத்தில், 255 கிலோமீட்டர் தூரத்திற்கு டிஎஸ்டிபிஓ என்ற ரோடானது போடப்பட்டது.

இது கடந்த ஆண்டு முடிவிற்கு வந்ததை அடுத்து, அதனை இந்திய இராணுவம் பயன்படுத்த ஆரம்பித்து விட்டது. மேலும், கடந்த 2001ம் ஆண்டே இந்தப் பகுதியில் அதிநவீன விமான தரைதளத்தினை உருவாக்கும் முயற்சியில் இந்திய விமானப்படை உருவாக்க ஆரம்பித்து விட்டது. இதுவும், கடந்த ஆண்டு செயல்பாட்டிற்கு வந்தது. இதனை, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்.

இதனால், தற்பொழுது இந்தியா விமானப் படையும் லடாக் பகுதிக்குச் செல்ல திட்டமிட்டு உள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து, இரு நாட்டு அரசாங்கமும், தங்களுடையப் படையினை குவித்து வருவதால் லடாக் பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

HOT NEWS