ஜெதீபக், ஜெதீபா தான் நேரடி வாரிசுகள்! தீர்ப்பை திருத்திய நீதிமன்றம்!

30 May 2020 அரசியல்
jdeepa.jpg

ஜெயலலிதாவுடைய சொத்துக்களுக்கு வாரிசுகளாக, ஜெ தீபாவினையும், ஜெ தீபக்கினையும் அறிவித்து, தன்னுடைய தீர்ப்பில் திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளது நீதிமன்றம்.

ஜெயலலிதாவிற்கு சொந்தமாக இருக்கும் 913 கோடி மதிப்புடைய சொத்துக்களை நிர்வகிக்க, ஒரு நிர்வாகியினை நியமிக்க வேண்டும் என, அதிமுக பிரமுகர் புகழேந்தி வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கினை, சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது. அந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் ஜெ தீபா மற்றும் ஜெ தீபக்கினை, ஜெயலலிதாவின் இரண்டாவம் நிலை வாரிசுகளாக அறிவித்தது.

இதனிடைய, தங்களையே வாரிசுகளாக அறிவிக்க வேண்டும் என, தங்கள் சார்பில் மனு தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த நீதிமன்றம், இந்து முறைப்படி, ஜெயலலிதாவிற்கு வாரிசுகள் கிடையாது. மேலும், அவருடைய தாயாரின் சொத்துக்களுக்கும், அவருடைய சொத்துக்களுக்கும் இவர்கள் தான் வாரிசு என்று கூறப்பட்டும் உள்ளது.

இதனை முன்னிட்டு, இரண்டாம் நிலை வாரிசுகள் என்பதை நீக்கிய நீதிமன்றம், இவர்கள் தான் வாரிசுகள் எனத் தன்னுடையத் தீர்ப்பினை திருத்தம் செய்துள்ளது. இது பற்றி பேசிய ஜெ தீபா, இது நீதிக்கு கிடைத்த வெற்றியாகும். இதனை நான் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை எனவும் கூறியுள்ளார்.

HOT NEWS