ஆணும் பெண்ணும் ஒரே அறையில் தங்கினால் அது குற்றமில்லை! உயர்நீதிமன்றம்!

09 December 2019 அரசியல்
highcourt.jpg

ஆணும், பெண்ணும் ஒரே அறையில் தங்கினால் அது குற்றமாகாது என, உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

கோயம்புத்தூரில் உள்ள தனியார் விடுதியில், ஆணும் பெண்ணும் தனியாக ஒரே அறையில் தங்கியிருந்ததாகவும், மேலும் அவர்கள் மதுவிற்பனை செய்பவர்கள் எனவும், தனி அறையில் மது பாட்டில்கள் இருந்ததாகவும் கூறி, தனியார் விடுதிக்கு போலீசார் சீல் வைத்தனர். இதனை கண்டித்து, தனியார் விடுதியின் நிர்வாகம் சார்பில், நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம், ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழக் கூடாது என எவ்வித சட்டமும் இல்லை. லிவ்ங் டூ கெதர் என்ற வாழ்க்கை முறையே நடப்பில் இருக்கும் பொழுது, எப்படி ஆணும் பெண்ணும் தனி அறையில் இருப்பது குற்றமாகும்? மது பாட்டில்கள் தனி அறையில் இருந்ததால், அவர்கள் எப்படி மது பாட்டில்கள் விற்பவர்கள் ஆவார்கள். விடுதிக்கு சீல் வைத்தது தவறு என உத்தரவு பிறப்பித்தது.

HOT NEWS