ஜெயலலிதா சொத்து விவகாரம்! 8 வாரத்தில் பதிலளிக்க உத்தரவு!

28 May 2020 அரசியல்
jayalalitha.jpg

ஜெயலலிதாவின் சொத்துக்களில் ஜெ.தீபாவிற்கும், ஜெ.தீபக்கிற்கும் உரிமை உண்டு என, சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மறைந்த முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவிற்கு சொநமாக, 913 கோடி ரூபாய் அளவிற்கு சொத்துக்கள் உள்ளன. அவைகளை, நிர்வகிக்க நிர்வாகி ஒருவரை நியமிக்க வேண்டும் என, அதிமுக பிரமுகர் புகழேந்தி என்பவர், நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்நிலையில், ஜெயலலிதாவின் வீட்டினை நினைவு இல்லமாக மாற்றும் முயற்சியில் அரசு ஈடுபட்டு வருகின்றது.

இந்த வழக்கானது, நேற்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது, எங்களுக்கு இந்த சொத்தில் உரிமை உள்ளது என, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் மற்றும் மகன் ஆகியோர் உரிமை கோரினர். இவர்களையும், இந்த வழக்கில் எதிர் தரப்பினராக, நீதிமன்றம் சேர்த்துக் கொண்டது. அந்த வழக்கின் இரண்டு தரப்பின் விவாதங்களையும் விசாரித்த நீதிமன்றம், ஜெ.தீபா மற்றும் ஜெ.தீபக் ஆகியோரினை சொத்தின் இரண்டாம் நிலை வாரிசுகளாக ஏற்றுக் கொண்டது.

ஜெயலலிதாவின் சொத்துக்களைக் கொண்டு, அறக்கட்டளை அமைக்கலாம். வேதா இல்லத்தின் ஒரு பகுதியினை மட்டும் ஏன், நினைவகமாக மாற்றக் கூடாது? ஏன் ஜெயலலிதாவின் இல்லை, முதலமைச்சரின் நிரந்தர இல்லமாக மாற்றக் கூடாது எனக் கேள்வி எழுப்பியுள்ளது. இந்த பரிந்துரைகளுக்கு பதிலளிக்க எட்டு வார அவகாசத்தினையும் நீதிமன்றம் வழங்கியுள்ளது. மேலும், சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க வேண்டும் என்ற புகழேந்தியின் வழக்கினை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இது குறித்துப் பேசிய ஜெ. தீபா, எங்களுக்கு நீதி கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கின்றது எனக் கூறி மகிழ்ச்சி அடைந்தனர்.

HOT NEWS