ஆன்லைன் ரம்மி! மத்திய மாநில அரசுகளுக்கு நீதிமன்றம் உத்தரவு!

27 August 2020 அரசியல்
highcourt.jpg

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுக்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற வழக்கில், மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள், இளம் வயதினர், இந்த விளையாட்டுக்களில் ஈடுபட்டு, மன ரீதியான துன்பங்களுக்கு ஆளாகின்றனர். மேலும், இந்த விளையாட்டுக்களால் பலர் தற்கொலையும் செய்து கொள்கின்றனர். இவ்வளவுப் பிரச்சனைகள் உள்ள இந்த விளையாட்டினை தெலுங்கானா, ஒடிசா, நாகாலாந்து, மகாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள் தடை விதித்து உள்ளன.

இந்த சூழ்நிலையில், இந்த விளையாட்டுக்களுக்கு தடை விதிப்பது குறித்து மத்திய மற்றும் மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும், இது தொடர்பான வழக்கினை, ஏற்கனவே தொடரப்பட்டுள்ள ஆன்லைன் கேம்கள் மீதான தடை பட்டியலில் இணைக்கவும் கூறியுள்ளது.

HOT NEWS