சென்னையில் உள்ள ரஜினியின் பள்ளிக் கூடத்தினை காலி செய்ய, உயர்நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.
சென்னையில் பல வருடங்களாக, ஆஸ்ரம் என்றப் பெயரில் கிண்டியில் ரஜினிகாந்தின் பள்ளியானது செயல்பட்டு வருகின்றது. அங்கு லதா ரஜினிகாந்த் செயலாளராக இருந்து வருகின்றார். அந்தப் பள்ளி அமைந்துள்ளக் கட்டிடத்திற்கு வாடகை தராமல், தொடர்ந்து இழுத்தடித்து வந்தார் லதா ரஜினிகாந்த். இதனால், கடுப்பான கட்டிடத்தின் உரிமையாளர், இதுவரை கொடுக்கமால் இருந்து வந்த வாடகையினை தர வேண்டும் எனவும் இல்லாவிட்டால், கட்டிடத்தினை விட்டுக் காலி செய்ய வேண்டும் எனவும் கூறினார்.
ஆனால், அதற்கு மறுப்புத் தெரிவித்த லதா தரப்பு, நீதிமன்றத்தினை நாடியது. நீதிமன்றத்தில் தற்பொழுது இது குறித்த தீர்பானது தற்பொழுது வெளியாகி உள்ளது. அதன்படி, வருகின்ற ஏப்ரல் 30ம் தேதிக்குள் கட்டிடத்தினை காலி செய்ய வேண்டும் எனவும், இல்லாவிட்டால் பள்ளி நிர்வாகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டு உள்ளது. இது தற்பொழுது, ரஜினி மனைவிக்கு தர்ம சங்கடத்தினை ஏற்படுத்தி உள்ளது.
ஊழல் இல்லாத அரசியல் செய்வோம் எனக் கூறி வருகின்ற ரஜினிகாந்த், தன்னுடையப் பள்ளிக்கு வாடகைத் தராமல் ஏமாற்றி வருகின்றார் என நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.