உயர்கல்வித்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று! அமைச்சர் விளக்கம்!

19 June 2020 அரசியல்
kpanbalagan.jpg

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகனுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகி உள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸானது, வேகமாகப் பரவி வருகின்றது. இந்த சூழ்நிலையில், தமிழகத்தின் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக அடுத்த 12 நாட்களுக்கு கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த கொரோனா வைரஸ் காரணமாக, திமுக கட்சியின் முக்கிய உறுப்பினரும் எம்எல்ஏவுமான ஜெ. அன்பழகன் உயிரிழந்தார். இந்த சூழ்நிலையில், தற்பொழுது அதிமுக கட்சியின் உருப்பினரும், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சருமான அன்பழகனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.

அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு தொற்று இருப்பதை உறுதி செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இவருடன் தொடர்பில் இருந்த அவருடைய மனைவி, தனிப் பாதுகாவலர், உதவியாளர், கார் ஓட்டுநர் ஆகியோருக்கும் கொரோனா தொற்று இருக்கின்றதா என்ற சோதனை செய்யப்பட்டு உள்ளது. அவர்களும் தற்பொழுது தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

இது குறித்துப் பேசியுள்ள அமைச்சர் அன்பழகன், எனக்கு கொரோனா தொற்று இல்லை எனவும், நான் தனிமைப்படுத்தப்படவில்லை எனவும், மருத்துவமனையில் இல்லை எனவும் அவர் விளக்கமளித்துள்ளார். கடைசியாக நடந்த முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் இவர் கலந்து கொண்டார். இதனால், அந்தக் கூட்டத்தில் இருந்த மற்றவர்களுக்கும், இந்தத் தொற்று ஏற்பட்டு இருக்கும் என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது.

HOT NEWS