சித்த மருத்துவத்தினை சந்தேகமாகப் பார்ப்பது ஏன்? நீதிமன்றம் கேள்வி!

10 July 2020 அரசியல்
highcourt.jpg

மத்திய மாநில அரசுகள், ஏன் சித்த மருத்துவத்தினை சந்தேகக் கண்ணுடன் பார்க்கின்றனர் என, சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

சித்த மருத்துவர் தணிகாச்சலத்தின் தந்தை, தற்பொழுது நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றினை சமர்பித்தார். அதனை இன்று சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது. அதனை விசாரித்த நீதிபதிகள், தணிகாச்சலம் தன்னிடம் கொரோனாவிற்கு மருந்து இருக்கின்றது எனக் கூறும் பொழுது, அதனை சோதிப்பதை விடுத்து, எதற்காக அவரைக் கைது செய்தனர் என்றுக் கேள்வி எழுப்பினர்.

மேலும், சித்த மருத்துவம் என்றாலே, ஏன் மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒருவித சந்தேகக் கண்ணுடன் பார்க்கின்றனர். அலோபதி மருத்துவம் என்றப் பெயரில், கபசுரக் குடிநீரை தான், அனைத்துப் பகுதிகளிலும் வழங்குகின்றீர்கள் எனவும், அதை வைத்து தான் சிகிச்சை வழங்கி வருகின்றீர்கள் எனவும் கூறியுள்ளனர்.

மத்திய மாநில அரசுகள், சித்த மருத்துவத்தில் மருந்து கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது என்றாலே, சந்தேகக் கண்ணுடனே பார்க்கின்றனர் எனக் கவலைத் தெரிவித்துள்ளனர். எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும், அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு என்றக் கூறலையும் முன்னுதாரணமாக கூறினர். கொரோனாவிற்கு எதிராக, எத்தனை சித்த மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன? அவைகளில் எவைகளை பரிசோதனை செய்தீர்கள் எனவும் சராமாரியாகக் கேள்வி எழுப்பினர்.

இந்த வழக்கில், மத்திய ஆயுஸ் அமைச்சகத்தினையும் தாமாக முன் வந்து இணைத்துள்ளனர். இவைகள் குறித்து விரிவான பதிலை மத்திய மற்றும் மாநில அரசுகள் தர வேண்டும் எனவும், வருகின்ற 23ம் தேதிக்கு இந்த வழக்கு தள்ளி வைக்கப்படுவதாகவும் கூறினர்.

HOT NEWS