ஹிந்தி இசை உலகில் அனைவருக்கும் தெரிந்த, இசையமைப்பாளர் திரு. ஹிமேஷ் ரேஷ்மியா. இவர் தூம் 2 படத்திற்கு இசையமைத்தவர். பல பாடல்கள் இவருடைய இசையில் ஹிட்டாகி உள்ளன. இவர் தற்பொழுது பிரபல இணைய பாடகியைத் தன்னுடய படத்தில் பாட வைத்துள்ளார்.
ரானு மோன்டால் என்றப் பெண்மணி, இணைய உலகில் மிகப் பிரபலமானவர். இவர், டிக்டாக், பேஷ் புக் உட்பட பல இணையதளங்களில், தன்னுடைய குரலில், பழைய பாலிவுட் பாடல்களை பாடியுள்ளார். இவர், மிகவும் கஷ்டப்படும் நிலையில் உள்ளவர்.
அவருடையக் குரலைக் கேட்பவர்கள், லதா மங்கேஷ்கரின் குரலைப் போன்று இருப்பதாகக் கூறுகின்றனர். இந்நிலையில், அவர் லதா மங்கேஷ்கரின் ஹிந்தி பாடலான ஏக் பியார் கா நக்மா ஹே என்ற ஹிந்திப் பாடலை பாடினார். இது இணையத்தில், பெரும் வைரலானது. இதனை பாலிவுட் பிரபலங்களின் கவனத்தை ஈர்த்தது.
இந்நிலையில், ரானு மோன்டாலை அழைந்த ரேஷ்மியா தன்னுடைய படத்தில் பாடுவதற்கு வாய்ப்பு வழங்கி உள்ளார். இது குறித்து, அவர் தன்னுடைய இண்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றினையும் வெளியிட்டுள்ளார். அதில், தேரி மேரி கஹானி என்றப் பாடலை ரானு மோன்டால் பாடுகிறார் எனக் குறிப்பிட்டுள்ளார்.
எது எப்படியோ, பலர் வாழ்க்கையை சீரழிக்கும் இணையம், சிலருக்கு புதிய வாழ்க்கையையும் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.