இந்தி தெரியாது! கன்னட மொழி நடிகர் நடிகைகள் பிரபலங்கள் போர் கொடி!

14 September 2020 அரசியல்
kanadahindiimposition.jpg

இந்தி தெரியாது போடா என, தமிழகத்தில் டீசர்ட் மூலம் தமிழ் மக்கள் தங்களுடைய எதிர்ப்பினை ஹிந்திக்கு எதிராக காட்டிய நிலையில், தற்பொழுது கன்னடா திரைப் பிரபலங்களும் தங்களுடைய எதிர்ப்பினைக் காட்டத் தொடங்கி உள்ளனர்.

நேற்று ஹிந்தி நாளானது, இந்தியா முழுக்கக் கொண்டாடப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக, பிரபல நடிகரும், அரசியல்வாதியுமான பிரகாஷ் ராஜ், நடிகர் சேத்தன் மற்றும் தனஞ்செயா உள்ளிட்டோர் ஹிந்தி கோத்தில்லா (ஹிந்தி தெரியாது) எனவும், நங்கா ஹிந்தி பாரல்லா ஹோக்ரப்பா (எனக்கு ஹிந்தி புரியவில்லை. போய்விடு) என்ற வாசகங்கள் அடங்கிய டீசர்ட்டினை மாட்டிக் கொண்டு, புகைப்படம் எடுத்து வெளியிட்டு உள்ளனர்.

இது இந்திய அளவில் டிரெண்டிங் செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் ஹிந்தி தெரியாது போடா, ஐ எம் தமிழ் ஸ்பீக்கிங் இந்தியன் என, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, திமுகவின் தூத்துக்குடி எம்பி கனிமொழி உள்ளிட்டப் பலரும் டீசர் அணிந்து எதிர்ப்பு தெரிவித்தனர். இது உலகளவில் டிரெண்ட் செய்யப்பட்டது. இந்த சூழ்நிலையில், கன்னட மொழிப் பேசுபவர்களும் தற்பொழுது இந்தி திணிப்பிற்கு எதிரானப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

HOT NEWS