ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் பங்குகளை விற்க மத்திய அரசு திட்டம்!

29 August 2020 தொழில்நுட்பம்
hal.jpg

ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனத்தின் பங்குளை விற்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

இந்தியாவின் மிக முக்கியமான பொதுத்துறை நிறுவனமாக, ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனம் இருந்து வருகின்றது. அந்த நிறுவனம் இந்தியாவிற்குத் தேவையான போர் விமானங்களையும், பயிற்சி விமானங்களையும் இந்தியாவிற்காகத் தயாரித்து வருகின்றது. இந்த விமானங்களைத் தயாரித்து வருகின்ற இந்த நிறுவனத்திடம், தற்பொழுது 89.7% பங்குகளை அந்நிறுவனம் வைத்துள்ளது.

இந்த நிறுவனம், தொடர்ந்து நஷ்டத்தின் பாதையில் சென்று கொண்டே உள்ளது. இதனால் இந்நிறுவனத்தின் பங்குகளும் மளமளவென சரிவினை நோக்கிச் சென்று கொண்டு இருக்கின்றன. இந்த நிறுவனத்தினைக் காப்பாற்றும் பொருட்டும், லாபத்தினை அதிகரிக்கும் பொருட்டும், ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனத்தின் பங்குகளை மத்திய அரசு விற்கத் திட்டமிட்டு உள்ளது.

அதன்படி, அந்த நிறுவனத்தின் 15 சதவிகிதப் பங்குகளை விற்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தற்பொழுது அந்த நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பானது, 1014 ரூபாயாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS