இசையமைப்பாளரும், நடிகருமான ஆதி புதியதாக படம் ஒன்றினை இயக்க உள்ளார்.
கதகளி, தனி ஒருவன், கோமாளி, கத்தி சண்டை, இமைக்கா நொடிகள், அரண்மனை 2, ஆம்பள, ஆக்சன் உள்ளிட்டப் பலப் படங்களுக்கு இசையமைத்தவர் ஹிப் ஹாப் ஆதி. இவர் மீசைய முறுக்கு, நட்பே துணை, நான் சிரித்தால் உள்ளிட்டப் படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இதில், மீசைய முறுக்குப் படமானது, அவரால் இயக்கி உருவாக்கப்பட்டது.
பல ஆல்பங்களையும் அவர் பாடியிருக்கின்றார். அவருக்கெனத் தனி ரசிகர் படையே உண்டு. அவர் தற்பொழுது மீண்டும் நடிப்பதைக் குறைத்துக் கொண்டு, இசையமைப்பதில் கவனம் செலுத்தி வருகின்றார். இந்நிலையில், மீண்டும் ஒரு படத்தினை இயக்க முடிவு செய்திருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் படத்திற்கு சிவக்குமாரின் சபதம் எனும் பெயரானது வைக்கப்பட உள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தினை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க உள்ளது.