தமிழில் இருமுகன் என்றப் படம் பார்த்திருப்போம். லவ் என்றக் கதாப்பாத்திரத்தில், நடிகர் விக்ரம் நடித்திருப்பார். அதில், ஸ்பீட் என்ற மருந்தானது, காட்டப்பட்டு இருக்கும். அந்த மருந்தும், அந்தப் படத்தின் கதையுமே, நாசியினை காப்பியடித்தது என்றுக் கூறினால் அது மிகையாகாது.
அந்த அளவிற்கு, நாசிகளின் தாக்கமானது உலகின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ளது. இன்றும் ஜெர்மனிக்குச் சென்று, அங்குள்ள கிராம்ப்புறப் பகுதிகளில், நாசிகள் பற்றிப் பேசினால், அப்பகுதி மக்களின் முகத்தில் பயத்தினையும், உடலில் நடுக்கத்தினையும் காண முடியும். அந்த அளவிற்கு, அந்த நாசிப் படையினர் மிகவும் கொடூரமானவர்களாக இருந்துள்ளனர்.
ஹிட்லர் தலமையிலான ஜெர்மனியின் ஆதிக்கத்தில், பல நாடுகள் இருந்தன. ஜெர்மனி நாட்டில் பல ஆய்வுக்கூடங்கள் இரகசியமாக செயல்பட்டு வந்தன. ஹிட்லருக்கு, அறிவியலில் அதீத ஆர்வம் உண்டு. அவர் புதிய புதிய ஆயுதங்களையும், போர் யுத்திகளையும் உருவாக்கியவர். அவர், இராசாயன ஆயுதங்களையும், போர் கருவிகளையும் உருவாக்கியவர் ஹிட்லர்.
அவர் அறிவியலுக்கு முழு சுதந்திரம் வழங்கி இருந்தார். அந்நாட்டில் ஒரு ஆய்வுக் கூடம் இருந்துள்ளது. தற்பொழுது வரை, அந்த ஆய்வுக் கூடம் எங்கிருந்தது என்ற அதிகாரப்பூர்வ தகவல்கள் யாருக்கும் கிடைக்கவில்லை. அந்த ஆய்வுக் கூடத்தில், மருந்து ஒன்றுக் கண்டுபிடிக்கப்பட்டு இருந்தது. அம்மருந்தானது, தாரில் இருந்து உருவாக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
அந்த மருந்தானது, முதலில் இறந்தவர்களின் மீது பரிசோதிக்கப்பட்டது. இறந்த கொஞ்சம் நேரம் ஆனவர்கள் மீது, இந்த மருந்தானது உடனடியாக வேலை செய்தது. இறந்தவர்கள் உயிருடன் எழுந்தனர். அவ்வாறு எழுந்தவர்களுக்கு, அதிக தாகம் எடுக்க ஆரம்பிக்கும். பின்னர், உடலில் எவ்வித உணர்ச்சிகளும் இருக்காது. அவர்களை போரில் இறக்கிவிடுவதற்காக, அப்படி ஒரு மருந்தானது தயாரிக்கப்பட்டு இருந்தது.
உடலில் வலி இல்லாத, மரணம் இல்லாதப் படையினை உருவாக்குவதே ஹிட்லரின் எண்ணமாக இருந்தது. இருப்பினும், இந்த மருந்தானது, அவ்வாறு உயிர் பெற்றவர்களின் உடலில் பல மாறுதல்களை உருவாக்கியது. அவர்கள் உருவாக்கிய மருந்தினை, கிராமத்து மக்கள் மீதும் பயன்படுத்தினர். உயிருடன் இருப்பவர்கள் மீதுப் பயன்படுத்தும் பொழுது, உடலில் வீரியம் அதிகரித்தது. கோபமும், அதிக பசியும் எடுத்தது. அவர்கள், மனிதர்களை கொடூரமாக வேட்டையாடினர். அதே போல், இறந்தவர்களும் நடந்து கொண்டனர்.
தங்களால் கட்டுப்படுத்த முடியாத நபர்களை எல்லாம், இந்த ஆய்வுக் கூடத்தில் உள்ள ஒரு இடத்தில், தீ வைத்து விஞ்ஞானிகளும், நாசி வீரர்களும் எரித்தனர். ஆனால், பிரான்ஸ் நாட்டின் படையெடுப்பால், இந்த ஆய்வுக்கூடமும், அந்த மருந்தும் வெற்றிகரமாக அழிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. மரணமே இல்லாத ஒரு படை ஹிட்லருக்கு அந்த மருந்தால் கிடைத்திருக்கும். ஒருவேளை அவ்வாறு கிடைத்திருந்தால், உலக வரலாறே தலைகீழாக மாறியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.