இன்று உள்ள அனைத்து மருத்துவர்களுக்கும், விஞ்ஞானிகளுக்கும் சவாலாக உள்ள நோய் என்றால் அது எய்ட்ஸ். இன்று வரை, இதற்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நோயால் பாதிக்கப்பட்டோர் பல கோடி பேர். இந்நோயைப் பற்றி நாம் நன்கு அறிவோம்.
இருப்பினும், இந்த ஹெச்.ஐ.வி வைரஸைன் மாபெரும் பலம் என்ன தெரியுமா? பொதுவாக அனைத்து வைரஸ்களுக்கும் ஒரு வடிவம் உண்டு. அதன் வடிவத்தை சிதைத்து அதன் மூலக்கூறுகளை அழிக்கும் மருந்துகளை விஞ்ஞானிகள் உருவாக்கினர். ஆனால், ஹெச்.ஐ.வி விஷயமே வேறு. உதாரணமாக ஹெச்.ஐ.வி வைரஸ் செவ்வக வடிவத்தில் இருப்பதாக கொள்வோம். அதற்கு விஞ்ஞானிகள் ஒரு மருந்தைக் கண்டுபிடிக்கின்றனர். அம்மருந்து இந்த வைரஸூடன் இணைந்து வேலை செய்ய ஆரம்பிக்கும். ஆனால், அதற்குள் ஹெச்.ஐ.வி வைரஸ் தன்னுடைய வடிவத்தை வேறு வடிவத்திற்கு மாற்றிக் கொள்கிறது. இதன் காரணமாகவே, இதுவரைக் கண்டுபிடிக்கப்பட்ட மருந்துகளால் எவ்விதப் பயனும் இல்லை.
உருவத்தை இதுத் தொடர்ந்து மாற்றிக் கொள்வதால், இதனை அழிக்கும் மருந்தினைக் கண்டுபிடிப்பதில் மாபெரும் தோல்வியைப் பல ஆயிரம் விஞ்ஞானிகள் சந்தித்துள்ளனர். இந்நிலையில், தற்பொழுது ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளிவந்துள்ளது.
அதன்படி, ஹெச்.ஐ.வி வைரசினைக் கட்டுப்படுத்தும் மருந்தை விஞ்ஞானிகள் வெற்றிகரமாகக் கண்டுபிடித்து விட்டனர். இருப்பினும், இது இன்னும் ஆராய்ச்சி நிலையிலேயே உள்ளது. கிட்டத்தட்ட 99% வெற்றியைத் தந்துள்ளதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இருப்பினும், முழுமையான வெற்றிக்காக உழைப்பதாகவும், கண்டிப்பாக, 2020ல் இந்த மருந்து முழுமைப் பெற்றுவிடும் என்றும் நம்புகின்றனர்.
ஒருவேளை 2020ல் இந்த மருந்து கண்டுபிடிக்கப்பட்டு உலகளவில் அறிவிக்கப்பட்டுவிட்டால், உலகில் எய்ட்ஸ் நோயால் கஷ்டப்படும் மக்களுக்கு ஒரு வரமாகவே இது அமையும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.