சிஆர்பிஎப் இந்திய பொருட்கள் விற்பனை! உத்தரவை திரும்ப பெற்றது உள்துறை!

21 May 2020 அரசியல்
amitshahspeechcaa.jpg

சிஆர்பிஎப் படைகளுக்குச் சொந்தமான கேன்டீன்களில் இனி இந்தியப் பொருட்கள் மட்டுமே விற்கப்படும் என்ற உத்தரவினை, மத்திய உள்துறை அமைச்சகம் திரும்பப் பெற்றது.

கடந்த மே 12ம் தேதி அன்று, நாட்டு மக்களுடன் உரையாற்றிய பிரதமர் மோடி, 21ம் நூற்றாண்டில் சுதேசப் பொருட்களை பயன்படுத்துவதன் மூலமே இந்தியாவினால் வல்லரசாக முடியும் எனக் கூறினார். மேலும், 20 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு, புதிய நிதியுதவித் திட்டங்களை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பார் எனவும் கூறினார்.

இதனை அடுத்து, இனி இந்தியாவில் உள்ள சிஆர்பிஎப் உள்ளிட்டப் பல படைப் பிரிவுகளில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களே விற்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த அறிவிப்பினை வெளியிட்டார். இந்த சூழ்நிலையில், 20 லட்சம் கோடியில் பல திட்டங்களை அறிவித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பெரும்பாலான பொதுத்துறையில் தனியார் அமைப்பின் முதலீட்டிற்கு அனுமதி அளித்தார். மேலும், வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீட்டிற்கும் அனுமதி அளித்தார்.

இந்த சூழ்நிலையில், தற்பொழுது உள்துறை சார்பில் புதிய அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது. அதில், இனி இந்தியாவில் உள்ள சிஆர்பிஎப் உள்ளிட்டப் படைப் பிரிவுகளில் இந்தியாவின் சுதேசப் பொருட்களே விற்கப்படும் என்ற அறிவிப்பினைத் திரும்பப் பெறுவதாக அறிவித்து உள்ளது.

HOT NEWS