வீட்டில் துணியில் செய்யும் மாஸ்க்குகள் சிறப்பாக செயல்படுகின்றன!

24 July 2020 அரசியல்
homemademask.jpg

கொரோனாவிற்காக தயாரிக்கப்படும் முகக் கவசங்களில், வீட்டில் துணியினால் உருவாக்கும் கவசங்கள் சிறப்பாக செயல்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸானது, உலகம் முழுவதும் பரவி இருப்பதால் உலகில் உள்ளப் பலரும் முகக்கவசங்களைப் பயன்படுத்தி வருகின்றன. உலகின் அனைத்து நாடுகளும், முகக் கவசங்களைப் பயன்படுத்துமாறு, தன்னுடைய மக்களைக் கேட்டுக் கொண்டும் உள்ளனர். இதற்காக சீனாவினைச் சேர்ந்த நிறுவனங்கள், மூன்றடுக்குக் கொண்ட மாஸ்க்குகளையும் என்-95 மாஸ்க்குகளையும் கோடிக் கணக்கில் உற்பத்தி செய்து விற்று வருகின்றன.

இந்தியாவினைப் பொறுத்தமட்டில், என்-95 மாஸ்க்குகள் தற்பொழுது தடை செய்யப்பட்டாலும், பெருமளவில் மூன்றடுக்கு மாஸ்க்குகளே அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த மாஸ்க்குகள் குறித்து, தற்பொழுது புதிய ஆய்வு நடத்தப்பட்டது. அதில், தொழிற்சாலைகள் மற்றும் கடைகளில் தயாரிக்கும் மாஸ்க்குகளினை விட, பொதுமக்கள் தங்கள் வீட்டில் உள்ள துணிகளை வைத்துத் தயாரிக்கும் மாஸ்க்குளே அதிகமாக தடுக்கின்றன.

வீட்டில் தயாரிக்கும் மாஸ்க்குகளில், மூன்றடுக்கு அமைப்பானது சிறப்பாக செயல்படுகின்றது. அதுமட்டுமின்றி, இது கனமாக இருப்பதால், வைரஸ் கிருமிகளால் பெருமளவில் இந்த கவசத்திற்குள் ஊடுறுவ இயலவில்லை. எனவே, இது மிகவும் பாதுகாப்பானதாக உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

HOT NEWS