கைலாசாவில் ஓரினச் சேர்க்கை முழு அனுமதி! நித்தியானந்தாவின் கடிதத்தில் தகவல்!

02 March 2020 அரசியல்
nithyanandabluenotice.jpg

கைலாசா நாட்டில், ஓரினச் சேர்க்கைக்கு முழு அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாக, நித்தியானந்தாவின் கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.

இந்திய நாட்டில், மதத்திற்கு எதிராக பல சூழ்ச்சிகள் நடப்பதாகவும், ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக உள்ளிட்ட அமைப்புகளால் தமக்கு ஆபத்து இருப்பதாவகவும், நித்தியானந்தா தன்னுடைய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் மத சுதந்திரத்திற்கு கட்டுப்பாடுகள் உள்ளதாகவும், இதனால் தன்னால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை எனவும் அவர் தெரிவித்து உள்ளார்.

தான் உருவாக்கி உள்ள கைலாசா நாட்டில், அனைத்தும் சமமாக இருக்கும் எனவும், ஆண் மற்றும் பெண் எனும் இயற்கைக்குட்பட்ட உறவுகளுக்கு மட்டுமின்றி, ஆண்-ஆண் மற்றும் பெண்-பெண் எனும், இயற்கைக்கு மாறான ஓரினச் சேர்க்கைகளும் அனுமதிக்கப்படும் எனவும் கூறப்பட்டு உள்ளது. மேலும், இந்தியாவில் 370வது சட்டத்தின் காரணமாக, பல பாலியல் குற்றங்கள் நடைபெறுவதாகவும், தற்பொழுது அது ரத்து செய்யப்பட்டாலும், அதனைக் காரணம் காட்டி போலீசார் கைது நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

தன்னுடைய நாட்டில், திருநங்கைகளுடன் உறவு வைத்துக் கொள்வது முதல், ஓரினச் சேர்க்கை வரை அனைத்திற்கும் அனுமதி உள்ளது எனவும், இதனால், சாமியார்கள் தங்களுடைய பாதையில் சரியாக செல்வார்கள் எனவும் கூறப்பட்டு உள்ளது.

HOT NEWS