எங்களைக் காப்பாற்றுங்கள் ட்ரம்ப்! ஹாங்காங் போராட்டக்காரர்கள் கோரிக்கை!

09 September 2019 அரசியல்
hongkong1.jpg

அமெரிக்கா தலையிட்டு, சீனாவிடம் இருந்து எங்களைப் பாதுகாக்க வேண்டும் என, ஹாங்காங்கில் நடைபெற்றும் போராட்டத்தில், போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சீனா-ஹாங்காங் கைதிகள் பரிமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹாங்காங்கில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த சட்டத்தினைத் திரும்பப் பெறுவதாக, அரசாங்கம் கூறிவிட்ட நிலையில், போராட்டம் இன்னும் தொடர்கிறது. அவர்கள் சீனாவிடம் இருந்து பிரிந்து செல்ல வேண்டிப் போராடவும் செய்கின்றனர்.

இதனால், சீனா மற்றும் ஹாங்காங் பாதுகாப்புப் படையினர், பாதுகாப்பு பணியில் முழுமையாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பலர், தீ வைப்பு, வாகனங்கள் எரிப்பு, கல் வீச்சு உட்பட பல வன்முறையான செயல்களில் ஈடுபடுவதால், காவலர்கள் அவ்வப்பொழுது தடியடி முதல், கண்ணீர் புகை குண்டு, ரப்பர் குண்டு வீச்சு உட்பட சில பாதுகாப்பு நடவடிக்கைகளில், ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், போராட்டக்காரர்கள் அமைதியடையவில்லை.

ஆப்கானிஸ்தான் அமெரிக்காவின் பிடியில் இருக்கின்ற வரை, எங்களுடையத் தாக்குதல்கள் தொடரும் என்று கூறியுள்ளனர். டிரம்ப்பின் இந்த செயல், பல இழப்புகளை அவர்களுக்கு ஏற்படுத்தும். மேலும், எங்களுடையத் தாக்குதல் அதிகமாகும் எனவும் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற போராட்டத்தில், அமெரிக்க கொடியை ஏந்திய போராட்டக்காரர்கள், அதிபர் டிரம்ப் இதில் தலையிட்டு, எங்களுக்கு உதவ வேண்டும் என்ற வாசகங்களுடன் கோரிக்கை விடுத்தனர். ஏற்கனவே, சீனாவிற்கும், அமெரிக்காவிற்கும், பொருளாதார யுத்தமே நடந்து கொண்டிருக்கும் நிலையில், ஹாங்காங் போராட்டக்காரர்களின் செயல், சீனாவின் கோபத்தினை மேலும், அதிகப்படுத்தியுள்ளது.

HOT NEWS