ஹாங்காங் கலவரம்! விழி பிதுங்கும் காவலர்கள்!

02 September 2019 அரசியல்
hongkongprotest.jpg

ஹாங்காங் நகரில், நாளுக்கு நாள் கலவரம் மோசமாகி வருகிறது. இதனால், என்ன செய்வதென்றுத் தெரியாமல், போலீசார் விழி பிதுங்கி நிற்கின்றனர். தொடர்ந்து மூன்று மாதங்களுக்கும் மேலாக இப்போராட்டம் நடைபெற்று வருவதால், ஹாங்காங் மாகாணத்தின் பொருளாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. காலையில், ஆர்ப்பாட்டங்கள் நடந்தாலும், இரவாகிவிட்டால் கலவரமே வெடித்துவிடுகிறது.

இதற்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுவது, இந்தாண்டு ஏப்ரல் மாதம் உருவாக்கப்பட்ட புதிய சட்ட மசோதா தான். ஆம், அந்த மசோதாவின் மூலம், ஹாங்காங்கில் உள்ள குற்றவாளிகளை, சீனாவிடம் ஒப்படைக்கலாம். இதற்கு ஹாங்காங்கில் இருந்த ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர், வழக்கறிஞர்கள், பத்திரிக்கையாளர்கள் என ஒவ்வொருவராக இணைந்தனர். பின்னர், மாணவர்களும் கலந்து கொண்டதில் பிரச்சனைப் பெரிதாக வெடித்தது.

இப்பொழுது அது மாபெரும் கலவரமாக மாறியுள்ளது. வீதிகளில் போலீசார் 24 மணி நேரமும் ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். நேற்று ஹாங்காங் விமானநிலையத்தினை நோக்கி, போராட்டக்காரர்கள் முன்னேறிச் சென்றனர். இருப்பினும், அங்கிருந்த போலீசார் அவர்களை விமான நிலையத்திற்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தினர். ஒரு சில இடங்களில் தடியடியும் நடைபெற்றது. ஹாங்காங்கினை 1842ம் ஆண்டு இங்கிலாந்தினால் கைப்பற்றப்பட்டது. பின்னர், சீனாவிற்கு குத்தகைக்கு விட்டது இங்கிலாந்து. தற்பொழுது அந்தக் குத்தகைக் காலம் முடியும் தருவாயில் உள்ளது.

இருப்பினும், ஹாங்காங்கினை எங்களிடம் வழங்கி விடுங்கள் என இங்கிலாந்திடம், சீனா கோரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், ஹாங்காங்கிற்குத் தனி அந்தஸ்து வழங்கியும், சீனா பார்வையில் உள்ளது. இதனை அம்மாகாண மக்கள் எதிர்த்து வருகின்றனர். இதுவும் இப்பிரச்சனைக்கு ஒரு முக்கியக் காரணமாக கருதுகின்றனர்.

HOT NEWS