கேம்ப் ஆப் த்ரோன்ஸ் நாடகத்தின் புதிய புகைப்படம் வெளியானது!

30 October 2019 சினிமா
houseofdragon.jpg

உலகளவில், நம்பர் ஒன் இடத்தில் உள்ள நடாகம் என்றால், அது கேம் ஆப் த்ரோன்ஸ். இந்த நாடகத்தினைப் பற்றித் தெரியாத இணையவாசிகளேக் கிடையாது. அந்த அளவிற்கு இந்த நாடகம் உலகப் பிரபலம்.

ஆங்கிலத்தில், ஹெச்பிஓ சேனலில் ஒளிப்பரப்பாக ஆரம்பித்து, பல மொழிகளில் பல சேனல்களில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு ஒளிபரப்பானது. இந்த நாடகம் இந்த ஆண்டுடன் முடிவடைந்தது. இந்நிலையில், இந்த நாடகத்தின் அடுத்தப் பாகமானது தீவிரமாகத் தயாரிக்கப்பட்டு வருகின்றது.

இதனையும், கேம் ஆஃப் த்ரோன்ஸ் நாடகத்தினைத் தயாரித்த, ஜார்ஜ் ஆர்ஆர் மார்டின் தயாரிக்கின்றார். இந்த நாடகமானது, கேம் ஆஃப் த்ரோன்ஸ் நாடகத்தின் முந்தையக் காலக் கட்டத்தினைப் பற்றியதாக இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஹவுஸ் ஆஃப் டிராகன் எனப் பெயரிட்டுள்ளனர்.

இந்த நாடகத்தின் பர்ஸ்ட் லுக் தற்பொழுது வெளியாகி உள்ளது. அதில் டிராகனின் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த நாடகமும், பிரம்மாண்டமான முறையிலேயேத் தயாராகி வருகின்றது. இதன் முதல் பாகத்தில் பத்து எபிஸோடுகள் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நாடகம் வரும் 2020ம் ஆண்டு, மே மாதம் வெளியாக உள்ளது. இதனைத் தற்பொழுது, கேம் ஆஃப் த்ரோன்ஸ் நாடகத்தின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

HOT NEWS