ஹோஸ்டனில் 50,000 பேர் முன்னிலையில் மோடி! சிறப்புத் தொகுப்பு!

22 September 2019 அரசியல்
howdymodi1.jpg

அமெரிக்காவில் நடைபெற்று வரும் ஹோவ்டிமோடி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி, அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு ஹோஸ்டன் நகரில் உள்ள, என்ஆர்ஜி மைதானத்தில் மோடி பங்கேற்கும் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

அந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடியின் பேச்சைக் காண்பதற்கு, 50,000க்கும் அதிகமான, அமெரிக்க வாழ் இந்தியர்கள் திரண்டு இருந்தனர். இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பும் இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்றார்.

அப்பொழுது இருவரும் மேடையில் தோன்றி, கைகளை, அசைத்து மக்களை ஊக்குவித்தனர். பின்னர், இருவரும் தங்களுடைய அன்பினை பரிமாறிக் கொண்டனர்.

பின்னர் பேசிய மோடி, 2017ல் உங்கள் குடும்பத்தை எனக்கு அறிமுகம் செய்து வைத்தீர்கள். இன்று நான் என் குடும்பத்தினருக்கு, உங்களை அறிமுகம் செய்து வைப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் திரு. டொனால்ட் ட்ரம்ப் அவர்களே என, புகழ்ந்து தள்ளினார். மேலும் பேசிய மோடி, ட்ரம்ப் ஒரு திறமையான தொழிலதிபர் மட்டுமல்லை திறமையான அரசியல்வாதியும் கூட. அவருடைய ஆட்சிக் காலத்தில், அமெரிக்காவின் பொருளாதாரம் நல்ல வளர்ச்சியை எட்டியுள்ளது.

இது அவருடைய கடும் முயற்சியாலும், திட்டத்தாலும் உருவானவை. எப்படி பேச வேண்டும் என்பதை, திரு ட்ரம்பிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும் எனக் கூறினார்.

பின்னர் பேசிய ட்ரம்ப், அமெரிக்காவின் மிக நம்பகமான நண்பர்களுள் ஒருவரான இந்தியாவின் பிரதமர் திரு. நரேந்திர மோடி, டெக்ஸாஸ் நகருக்கு வருகைத் தருவதில் பெருமைக் கொள்கிறேன் என ஆரம்பித்தார். பின்னர் பேச்சினைத் தொடர்ந்த டிரம்ப், இந்தியாவில் நடந்தத் தேர்தலில் சுமார், 600 மில்லியன் மக்களின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்தவர் தான் மோடி என்று பாராட்டினார். கடந்த 10 ஆண்டுகளில், 30 கோடி மக்களை வறுமையிலிருந்து இந்தியா மீட்டுள்ளதென்பது, மிகப்பெரியது எனவும் கூறினார்.

தீவிரவாதத்தை அமெரிக்கா என்றும் எதிர்க்கும் எனவும், இஸ்லாமியத் தீவிரவாதம் கண்டிப்பாக, தடுக்கப்பட வேண்டும் எனவும் டிரம்ப் கூறினார். அதற்கு, அனைவரும் எழுந்து நின்று தங்களுடைய உற்சாகத்தையும், ஆதரவையும் அளித்தனர்.

HOT NEWS