என்ன தான் சொல்லுங்க, இந்த மோட்டோ போன்களுக்கு நிகர் எதுவுமில்லை எனக் கூறுவதற்காகவே, உலகில் ஒரு கூட்டம் உள்ளது. அவர்களின் நம்பிக்கையைப் பொய்யாக்காத வண்ணம் மற்றொரு ஸ்மார்ட்போனினை மோட்டோரோலா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
மோட்டோ ஜி8 பவர் என்ற புதிய ஸ்மார்ட்போனினை, மோட்டோரோலா நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம், இந்த ஸ்மார்ட்போன் சந்தைக்கு வந்துள்ளது. 4ஜி தொழில்நுட்பத்துடன் இந்த ஸ்மார்ட்போன் களமிறங்கியுள்ளது. இதன் வலிமையாகக் கருத்தப்படுவதே, இதிலுள்ள பேட்டரி தான். ஆம், அனைவரும் ஆச்சர்யப்படும் வகையில், இந்த போனில் 5000எம்ஏஹெச் பேட்டரியானது இணைக்கப்பட்டு உள்ளது.
18வாட்ஸ் சக்தியுள்ள பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தினை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளதால், விரைவாக இதனை நம்மால் சார்ஜ் செய்ய இயலும். 6.4 இன்ச் டிஸ்ப்ளேயுடன், 1080X2300 ஒளித்திரனை கொண்டதாக இதன் டிஸ்ப்ளே உள்ளது. இதில் டூயல் சிம் வசதியானது உள்ளது. முற்றிலும் நானோ சிம்மிற்காகவே இதனை வடிவமைத்துள்ளனர்.
இந்த ஸ்மார்ட்போனானது, ஆண்ட்ராய்ட் 10 இயங்குதளம் மூலம் இயங்குகின்றது. குவால்கம் ஸ்னாப்டிராகன் எஸ்டிஎம்665 சிப்செட்டில் இதன் மதர்போர்ட் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் ஆக்டோ கோர் சிபியூ உள்ளதால், இந்த ஸ்மார்ட்போனால் அதிவிரைவாக செயலாற்ற இயலும். மேலும், உயர்ரக கேம்களையும், ஆப்களையும் இயக்குவதற்கு ஏதுவாக ஆட்ரினோ கிராபிக்ஸ் கார்ட் இணைக்கப்பட்டு உள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில் 64ஜிபி ரோம் மெமரியும், 4ஜிபி ராம் மெமரியும் உள்ளன. சிம்கார்டு பயன்படுத்தும் ஸ்லாட்டினையே நாம், மெமரி கார்டிற்காக பயன்படுத்திக் கொள்ளலாம். தற்பொழுது வெளியாகும் அனைத்து ஸ்மார்ட்போன்களுக்கும் மிக முக்கியமான வசதியாக அனைவராலும் பார்க்கப்படும் விஷயம் என்றால், அது கேமிரா தான். இந்த போனில் எவ்வளவு பெரிய கேமிரா உள்ளது. அதன் வசதிகள் என்னென்ன எனப் பார்த்தே, பலரும் போன்களை வாங்குகின்றனர்.
அந்த வகையில் இந்த போனில் நான்கு கேமிராக்கள் உள்ளன. 15 எம்பி, 8எம்பி, 8எம்பி மற்றும் 2 எம்பி கேமிராக்கள் இணைக்கப்பட்டு உள்ளன. இதனால், துல்லியமாக 4கே தரமான வீடியோக்களையும், புகைப்படங்களையும் எடுக்க இயலும். அதே போல், 16 எம்பி செல்பி கேமிராவும் உள்ளது. இதனைக் கொண்டு, நம்மால் ஹெச்டி வீடியோக்களையும், புகைப்படங்களையும் எடுக்க இயலும்.