இந்த பத்து விதத்தில் தான் உலகம் அழியும்! எப்படின்னு தெரியுமா?

27 January 2020 தொழில்நுட்பம்
earthend.jpg

இந்த உலகம் என்றாவது ஒரு நாள் அழியும் என, நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், அது எப்படி என்பது பற்றி யாருக்கும் தெரியாது. ஆனால், விஞ்ஞானிகளோ இந்த உலகம் இப்படி எல்லாம் அழியலாம் என கணித்து இருக்கின்றனர். அப்படி அவர்கள் கணித்தவைகளில் மிக முக்கியமானவைகளை பற்றி பார்க்கலாம்.

ஏலியன்கள்

alienworld.jpg

பாபா வங்கா முதல் நாஸ்டர்டாமஸ் வரை அனைத்து, தீர்க்கத்தரிசிகளும் இந்த ஏலியன்களைப் பற்றிக் கவலைத் தெரிவித்து உள்ளனர். அவர்கள் தான் அப்படி என்றால், நம் அனைவருக்கும் தெரிந்த விஞ்ஞானியான, ஸ்டீபன் வில்லியம் ஹாவ் கிங்கும் இந்த ஏலியன்களைப் பற்றிக் குறிப்பிட்டு உள்ளார். இந்த உலகமானது, பல உயிரினங்களைக் கொண்டுள்ளது போல், இந்த பிரபஞ்சமானது பல கோடி உயிரினங்களைக் கொண்டுள்ளது. நம்முடைய விஞ்ஞானிகள் ஏலியன்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள தற்பொழுது வரை முயற்சி செய்து கொண்டு தான் இருக்கின்றன. ஆனால், அவ்வாறு ஒரு தொடர்பு ஏற்பட்டால், அது நிச்சயமாக அழிவில் தான் முடியும் என இவர்கள் நம்புகின்றனர்.

அணு ஆயுதப் போர்

atombombexplosion.jpg

உலகில் உள்ளப் பெரிய நாடுகள் அனைத்துமே, அணு ஆயுதங்களை வைத்துள்ளனர். உண்மையைக் கூற வேண்டும் என்றால், அணு ஆயுதங்கள் என்பது வெறும் கண் துடைப்புத் தான். பல விவகாரமான ஆயுதங்களை பெரிய நாடுகள் அனைத்துமே வைத்துள்ளன. அமெரிக்கா அனைவருக்கும் ஒரு படி மேலே சென்று, விண்வெளிப் படை ஒன்றினையும் உருவாக்கி வருகின்றது. அவர்களுடன் போட்டி போடும் ரஷ்யாவோ, என்ன செய்கின்றது என யாருக்கும் தெரியாது. தற்பொழுது கணக்கில் காட்டப்பட்டுள்ள அணுகுண்டுகள் வெடித்தாலே, இந்த உலகம் 2500 முறை அழிந்துவிடும். அந்த அளவிற்கு நாம் ஆயுதங்களை குவித்து வைத்திருக்கின்றோம் என, விஞ்ஞானிகள் கவலைத் தெரிவிக்கின்றனர்.

ஜாம்பி

zombiedeath.jpg

தமிழில் ஜெயம் ரவி மிருதன் படத்தில் நடித்திருந்தார். அதனைப் பார்த்தப் பலருக்கும், இந்த ஜாம்பியினைப் பற்றித் தெரிந்திருக்கும். அந்த அளவிற்கு, இந்த ஜாம்பியானது மிகப் பிரபலம். இதுவரை இது போன்ற ஒன்று வரலாற்றில் பதிவு செய்யப்படவில்லை என்றாலும், நாஸ்டர்டாமஸ் உள்ளிட்ட பெரிய தீர்க்கத்தரிசிகள் இது பற்றிக் கூறியுள்ளனர். இவ்வளவு ஏன், இந்த ஜாம்பியின் தாக்குதலை சமாளிக்கத் தான் அமெரிக்காவின் பெண்டகன் மாகாணம் பிரத்யேகமாக பத்து முக வடிவில் உருவாக்கப்பட்டு உள்ளது என்றால் நம்ப முடிகின்றதா? இது ஒரு வெளிவராத உண்மை.

இந்த ஜாம்பியால், மனித இனம் முற்றிலும் அழியும் அபாயம் உள்ளது எனவும், ஒருவேளை இந்த ஜாம்பித் தாக்குதல் நடைபெற்றால் மனிதர்கள் எப்படித் தப்பிப்பார்கள் எனவும் பலத் திரைப்படங்களும் வெளியாகி விட்டன.

பிளாக் ஹோல்

earthinblackhole.jpg

இந்த பிளாக் ஹோல் பற்றி, மக்களிடம் தற்பொழுது கொஞ்சம் தெளிவு பிறந்துள்ளது. இந்த பிளாக் ஹோல் மூலமும் நம்முடையப் புவியானது அழியும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இந்த பிளாக் ஹோலினை நம்முடையப் புவியானது நெருங்கும் போதோ அல்லது நம்முடைய புவி இருக்கும் இந்த பால்வெளி அண்டத்தினை பிளாக் ஹோல் நெருங்கும் பொழுதோ, பிளாக் ஹோலின் ஈர்ப்பு விசையின் காரணமாக நாம் வாழும் புவியானது எரிந்துவிடும். அவ்வாறு இல்லையென்றால், பிளாக் ஹோலுக்குள் செல்லும் பொழுது, மற்றக் கிரகங்களுடன் மோதி உடைந்து அழிந்துவிடும்.

எரிகல்

astroidsend.jpg

வருகின்ற 2036ம் ஆண்டு கூட, எரிகல் மூலம் ஆபத்து உள்ளது என விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர். மேலும், எரிகல் நம்முடையப் புவியில் பல மாற்றங்களை ஏற்கனவே உண்டு பண்ணி இருக்கின்றது. அரிசோனா மாகணம் முதல், ரஷ்யா வரை அனைத்துப் பகுதிகளிலும் இந்த எரிகல்லால் மாபெரும் மாற்றங்கள் நடைபெற்றுள்ளன. ஒரு பெரிய எரிகல் நம்முடையப் புவியில் மோதினாலே, நம்முடைய புவியானது எரிந்து, பின் சுக்கு சுக்காக நொறுங்கி விடும்.

காமா ஒளி வெடிப்பு

gamaray.jpg

இது பற்றிப் பலரும் தெரிந்திருக்க வாய்ப்பிலை. இந்த காமா ஒளி வெடிப்பானது, பிரபஞ்சத்தில் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றது. இந்த காமா ஒளி வெடிப்பு எங்கு ஏற்படுகின்றதோ, அங்குள்ள அண்டமே நொடிப் பொழுதில், அந்த ஒளியின் வெப்பத்தின் காரணமாக சாம்பலாகிவிடுமாம். அந்த அளவிற்கு அதன் வீரியமும், சக்தியும் மிக அதிகமாக இருக்கும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். நம்முடைய பால்வளி அண்டத்திற்கு அருகில், இது போன்ற ஒரு ஒளி வெடிப்பு நிகழ்ந்தால், நம்முடைய புவியானது கண் இமைக்கும் நேரத்தில் காணாமல் போய் விடும். மற்ற அழிவினைக் கூட நம்மால், கணித்துவிட முடியும். ஆனால், இந்த காமா ஒளி வெடிப்பினை நம்மால் கணிக்க இயலாது என்பது தான் இதன் மிகப் பெரிய சூட்சுமமே.

தொற்று நோய்

operationtheatre.jpg

இதுவும் ஜாம்பித் தாக்குதலைப் போலத் தான். இது பற்றி நம்முடைய சித்தர்களுள் ஒருவரான இடைக்காடரே, தன்னுடைய ஓலைச் சுவடிகளில் எழுதியுள்ளார். இதனைப் பற்றியும் நாஸ்டர்டாமஸ் தன்னுடைய நூலில் விவரித்துள்ளார். உலகளவில் திடீரென்று ஒரு தொற்றுநோய் உண்டாகும். அது மளமளவென வேகமாகப் பரவி, உயிர்களைக் கொல்லும். அதனை தடுப்பதற்குள் உலகில் உள்ள மக்களில் பாதிக்கும் மேலானோர் மரணமடைவர் எனக் கணித்துள்ளார். இதனை விஞ்ஞானிகளும் நம்புகின்றனர்.

ரோபோட்

cyborg.jpg

தற்பொழுது உள்ள 21ம் நூற்றாண்டினை ரோபோட்களே ஆளும் என, விஞ்ஞானிகள் கருதுகின்றனர். அந்த அளவிற்கு அந்தத் துறையானது, வளர்ச்சி அடைந்துள்ளது. ஒரு வேளை மனித அறிவு உள்ள ரோபோட்களை நாம் உருவாக்கிவிட்டால், கண்டிப்பாக அது நம் மனித குல அளவிற்கே காரணமாக ஆகிவிடும் என்று ஸ்டீபன் வில்லியம் ஹாவ் கிங் எச்சரித்து இருக்கின்றார்.

சூரிய வெடிப்பு

earthend.jpg

நம்முடைய பால்வெளி அண்டமே, இந்த சூரியனை நம்பித் தான் இருக்கின்றது. இதற்கு பல லட்சம் ஆண்டுகள் ஆயுள் உள்ளது என்றாலும், அவைகள் அனைத்துமே நம்முடையக் கணிப்புத் தான். உண்மையான ஆயுள் என்ன என்பது பற்றி யாருக்கும் துல்லியமாகத் தெரியாது. இந்த சூரியன் வெடித்துச் சிதறினாலோ அல்லது இந்த சூரியனில் சிறிய அளவில் வெடிப்பு ஏற்பட்டாலோ, அதன் வெப்பக் காற்றால் நம்முடைய புவி எரிந்து சாம்பலாகிவிடும். ஏற்கனவே, சூரிய கருப்பு துளைகள் உருவாகி வருவதால் விஞ்ஞானிகள் குழம்பி வருகின்றனர்.

பசி

hungry.jpg

எதனால் அழி வருகின்றதோ இல்லையோ, இந்த பசியால் நமக்கு கண்டிப்பாக அழிவு வர உள்ளது உறுதியான ஒன்று. தொடரும் கடல் மட்ட உயர்வு, இயற்கை அழிவு, விவசாயத்தில் ஏற்பட்டு வரும் மாற்றம் முதலானவை பெரும் பஞ்சத்தினை நோக்கி நம் மக்களை இழுத்துச் செல்கின்றது என, அறிவியல் ஆய்வாளர்கள் கவலைத் தெரிவித்துள்ளனர். ஒரு வேளை, மிகப் பெரிய அளவில் பஞ்சம் ஏற்பட்டுவிட்டால், அவ்வளவு தான். அனைவரும் உணவுக்காக சண்டையிட்டுக் கொண்டு பசியினாலேயே இறப்பர். இந்த பசியின் கணக்கில் நீரும் வருகின்றது. அடுத்த உலகப் போரே, இந்த நீருக்காகத் தான் இருக்கும் என, விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளதை பதிவு செய்ய வேண்டியது அவசியமான ஒன்றாகும்.

HOT NEWS