பான் கார்டினைப் பெற, இனி ஆதார் கார்டு போதும் என, மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இந்தத் திட்டமானது, இந்த மாதமே அமலுக்கு வர உள்ளது.
பான் கார்டு மூலம், ஒவ்வொருவரின் வருமானம் பற்றியத் தகவல், மற்றும் வங்கிக் கணக்குகள் பற்றிய விவரத்தினை அரசாங்கத்தால் வெளிப்படையாகத் தெரிந்து கொள்ள முடியும். இதன் மூலம், வரி ஏய்ப்பு உள்ளிட்ட விஷயங்கள் குறைய வாய்ப்புகள் உள்ளன. இதனை முன்னிட்டு, பான் கார்டுகளை கட்டாயம் ஆக்கியது மத்திய அரசு.
இதனைப் பெறுவதில், தாமதமும், நடைமுறை சிக்கலும் இருந்த காரணத்தால் இதில் உள்ள சிக்கலை நீக்கும் முயற்சியானது தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த மாதம் முதல், உங்களுடைய ஆதார் எண்ணினைப் பயன்படுத்தி, பான் கார்டினைப் பெறலாம்.
இதற்கு, முதலில் பான் கார்டின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் சென்று, உங்களுடையத் தகவல்களைப் பூர்த்தி செய்யவும். பின், ஆதார் அட்டையில் உள்ள எண்ணையும், அதில் உள்ள தகவல்களையும் நீங்கள் பூர்த்தி செய்தால், உங்களுடைய மொபைல் எண்ணிற்கு, ஒரு ஓடிபி எண் அனுப்பி வைக்கப்படும்.
அதனை, ஆன்லைனில் சமர்பிப்பதன் மூலம், உங்களுடைய பான் கார்டானது தயாராகி விடும். அதனை, பிரிண்ட் செய்வதற்கு தேவையான பணத்தினைக் கட்டினால், உங்கள் பான் கார்டானது, உங்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கபட உள்ளது.