ஆதரை எப்படி பான் கார்டுடன் இணைப்பது? விரிவான விளக்கம்!

28 September 2019 அரசியல்
aadhaarcard.jpg

வரும் அக்டோபர் ஒன்று முதல், ஆதாருடன் இணைக்கப்படாத பான் கார்டு செல்லாது என மத்திய அரசு எச்சரித்துள்ளது. இதனால், பொதுமக்கள் என்ன செய்வதென்று தெரியாமல், விழிபிதுங்கி உள்ளனர்.

இதனையடுத்து, எவ்வாறு பான் கார்டினை ஆதார் கார்டுடன் இணைப்பது, என்பதனைப் பார்ப்போம். கீழே ஆதார் கார்டினை இணைப்பதற்கான லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதனைப் பயன்படுத்தவும்.

முதலில், உங்களுடையப் பான் கார்டு மற்றும் ஆதார் அட்டையை கையில் எடுத்துக் கொள்ளவும். கொடுக்கப்பட்டுள்ள இணையப் பக்கத்தில், பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு எண்ணினை பதிவு செய்யவும்.

பின்னர், ஆதார் கார்டில் உள்ள பெயரினை, அப்படியே எதுவும் மாற்றாமல், இணையப் பக்கத்தில் பதிவு செய்யவும். அதில் கேப்சா கொடுக்கப்பட்டிருக்கும். அதனையும் சரியாக பதிவு செய்யவும். அவ்வாறு, பதிவு செய்த பின், லிங்க் ஆதார் என்ற பட்டனை அழுத்தவும். அவ்வளவு தான். பான் கார்டுடன் ஆதார் கார்டு இணைக்கப்பட்டுவிடும். இது மிகவும் எளிமையானது. அரசாங்க அலுவலகத்திற்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை.

ஒருவேளை உங்கள் ஆதார் கார்டில், பெயர் இல்லாமல் பிறந்த தேதி மட்டும் இருந்தால், அதற்கு தனியாக ஒரு குட்டி பெட்டி போன்ற அமைப்பு இருக்கும். அதனை கிளிக் செய்து கொள்ளவும். பின்னர், கீழே கொடுக்கப்பட்டுள்ள (I agree to validate my aadhaar details with UIDAI) என்ற பொத்தானையும் அழுத்த வேண்டும். ஒரு வேளை பார்வைத் திறன் அற்றவர்கள் என்றால், கீழே உள்ள (Visually Challenged Users) என்ற பிரிவில் ரெக்குவஸ்ட் ஓடிபி என்ற பொத்தானை அழுத்தவும். உங்கள் மொபைலுக்கு ஓடிபி வரும். அதனைப் பதிவு செய்யும் பொழுது, உங்களுடைய ஆதார் எண், பான் கார்டுடன் இணைக்கப்பட்டு விடும். அவ்வளவு தான்!

aadhaarcard GROUP 2 SYLLABUS TAMIL

HOT NEWS