கொரோனாவால் இறந்தவர்கள் உடலை இப்படித் தான் அடக்கம் செய்ய வேண்டும்! அரசு அறிவிப்பு!

27 March 2020 அரசியல்
funeralcermony.jpg

கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்தவர்களின் உடலினை, எவ்வாறு அடக்கம் செய்ய வேண்டும் என மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது.

இந்தியாவில் இந்த கொரோனா வைரஸ் பாதிப்பானது, நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இன்று (27-03-2020) வெளியான தகவலின் படி, சுமார் 750 இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், 17 பேர் பலியாகி உள்ளனர் எனவும் கணக்கிடப்பட்டு உள்ளது.

அவ்வாறு இறந்தவர்களின் உடலினை, மற்ற பிணத்தினைப் போல அடக்கம் செய்யக் கூடாது எனவும் அறிவுரை வழங்கியுள்ளது. இந்த உடலில் வைரஸ் தொற்று இருக்கலாம் என்ற அச்சம் நிலவியும் வருகின்றது. இதனால், கொரோனா வைரஸ் பாதிப்பில் இறந்தவர்களின் உடலினை, எவ்வாறு அடக்கம் செய்ய வேண்டும் என்ற வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.

அதன்படி, இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடலினைக் கழுவக் கூடாது. துணியினை மாற்றக் கூடாது. கட்டிப்பிடிக்கக் கூடாது. முத்தம் தரக் கூடாது. முகம் அருகே செல்லக் கூடாது. கூட்டம் கூடி இறுதி அஞ்சலி செலுத்தக் கூடாது என கூறப்பட்டு உள்ளது. அதே சமயம், புனித நீர் தெளித்தல், வேதம் படித்தல் முதலிய மதச் சடங்குகளை செய்யலாம். மேலும், எரிக்கப்பட்ட உடலின் சாம்பலைத் தொடலாம் எனவும், அதற்கு எவ்விதத் தடையும் இல்லை எனவும் கூறப்பட்டு உள்ளது.

HOT NEWS