மனைவிக்கு மசாஜ் செய்யுங்கள்! ஆயுர்வேதமும் குடும்பமும்!

24 August 2019 உடல்நலம்
massage.jpg

உடல்நலம் அனைவருக்கும் பொதுவானது. அதில் தொடுதல் மூலம் உடலில் உள்ளப் பிரச்சனைகளை பெரும்பாலும் தீர்க்க இயலும். ஆதி காலம் முதல், கணவன் மனைவிக்கும், மனைவி கணவனுக்கும் மசாஜ் செய்யும் பழக்கம் இருந்து வருகிறது.

இதனால், உடல் மற்றும் மன அழுத்தம் குறைந்து புத்துணர்ச்சிப் பெருகிறது. உடலில் சுருங்கிய நிலையில் உள்ள தோல், மற்றும் சதைப்பிடிப்புள்ள பகுதிகள் நன்றாக விரிவடைகின்றன. இதனாலேயே திரைப்பட நட்சத்திரங்கள் முதல் பணக்காரர்கள் வரை, மசாஜ் சென்டர்களுக்குப் படை எடுக்கின்றனர்.

மசாஜ் நிறுவனங்களில், பலவிதமான மசாஜ்கள் செய்யப்படுகின்றன. இருப்பினும், அவை அனைத்துமே பணத்திற்காக, அதனைத் தொழிலாகச் செய்யும் நபர்களால் செய்யப்படுகிறது.

எப்படி மசாஜ் செய்வது?


இது மிகவும் சுலபமான விஷயம் ஆகும். வீட்டில் உள்ள நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவைகளை நாம் பயன்படுத்தலாம். சமையலுக்குப் பயன்படுத்தாமல் இருக்கும் எண்ணெயை மட்டுமேப் பயன்படுத்த வேண்டும். அந்த எண்ணெயை எடுத்து, மனைவி அல்லது கணவன் உடல் முழுவதும் தேய்த்துவிட வேண்டும். பின்னர், தலையில், பத்து விரல்களையும் வைத்து, பிசய வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம், தலையில் உள்ள செல்கள் புத்துணர்ச்சி அடையும்.

பின்னர், முகத்தில் எண்ணெயை பூசி, மெதுவாக தடவ வேண்டும். பின்னர், கை மற்றும் கால்களில், எண்ணெயை தடவி, மெதுவாக மேலிருந்து கீழாக மென்மையாக இழுத்து விட வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம், கை மற்றும் கால்களில் வலி இருந்தால், மெதுவாக மறைய ஆரம்பிக்கும். கை மற்றும் கால்களில் உள்ள நரம்புகள் வலுவடையும்.

பின்னர், வயிறு, இடுப்பு ஆகிய பகுதிகளில் எண்ணெயை ஊற்றி, மெதுவாகவும், மென்மையாகவும் இழுத்து விட வேண்டும். பெண்களுக்கு மார்பகப் பகுதியில், மசாஜ் செய்யும் பொழுது, மென்மையாக செய்யும் பொழுது, மார்பகம் விரிவடையும். அவ்வாறு தொடர்ந்து செய்வதன் மூலம், குழந்தைப் பிறக்கும் சமயத்தில், தாய்ப்பால் சுறப்பது நன்றாக இருக்கும்.

மர்ம உறுப்புகளில், செய்யும் பொழுது நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளக் கூடாது. அவ்வாறு செய்தால், உடலில் உஷ்ணம் அதிகமாக ஆரம்பித்துவிடும். எனவே, மறைமுகப் பகுதிகளில் மசாஜ் செய்யும் பொழுது, வேகமாகவும், மென்மையாகவும் செய்யவும்.

இது ஆண்களுக்கும் பொருந்தும். மசாஜ் செய்யும் பொழுது, ஒரு டர்க்கி டவுலைப் பயன்படுத்தவும். மசாஜ் செய்த பின், வெதுவெதுப்பாக உள்ள சுடுதண்ணீரில் குளிப்பது, உடலுக்கு நல்லது. குளிர்ந்த நீரிலும் குளிக்கலாம், தவறில்லை. ஆனால், மசாஜ் செய்துவிட்டு வெயிலில் அலைய வேண்டாம். மீண்டும் உடலில் வெப்பம் அதிகரிக்க ஆரம்பிக்கும். எனவே, விடுமுறை நாட்களில் மசாஜ் செய்துவிட்டு, குடும்பத்துடன் வீட்டில் ஓய்வு எடுப்பது நல்லது.

மசாஜ் செய்த பின், இளநீர் போன்ற இயற்கை உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். ஒரு சிலருக்கு சளிப் பிடிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. எனவே, அதனையும் கணக்கில் கொண்டு இதனைச் செய்யவும். கண்ட மசாஜ் சென்டர்களுக்குச் சென்று, உடலையும், பணத்தையும் வீணாக்குவதற்கு வீட்டில் நீங்கள் உங்கள் மனைவிக்கோ அல்லது கணவனுக்கோ செய்வது நல்லது தானே!

HOT NEWS