டிக்டாக் இல்லாத ஸ்மார்ட் போன்களே இல்லை என்ற நிலை, உருவாகி உள்ளது. அந்த அளவிற்கு, இந்த ஆன்ட்ராய்டு ஆப்பினை அனைவரும் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். இதில், தன்னுடையத் திறமையைக் காட்டி, பல நிகழ்ச்சிகளுக்கு விருந்தினராகவும் செல்கின்றனர். பலர், இதில் மிகப் பிரபலமடையவும் செய்கின்றனர்.
ராணி மொன்டால் என்ற பெண், தற்பொழுது ஹிமேஷ் ரேஷ்மியாவின் இசையில், பாலிவுட் படத்திற்காக பாடல் ஒன்றினைப் பாடிவிட்டார். அந்த அளவிற்கு, இந்த டிக்டாக் அனைவரையும் படாதபாடு படுத்தி வருகின்றது. மேலும், இந்த டிக்டாக் மூலம் பல பேர் தங்களுடைய வாழ்க்கையையும் இழந்துள்ளனர் என்றால், அதில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை.
இந்த டிக்டாக் மூலம், பலர் லட்சக்கணக்கில் சம்பாதிக்கின்றனர். சரி, எப்படி டிக்டாக் மூலம் எவ்வாறு பணம் சம்பாதிப்பது எனப் பார்ப்போம்.
முதலில், ஒரு நல்ல ஸ்மார்ட்போனை வாங்கிக் கொள்ளுங்கள். அதில், டிக்டாக் ஆப்பினை டவுன்லோட் செய்து கொள்ளவும். அத்துடன் உங்கள் யூடியூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் உள்ள உங்கள் கணக்கினை இணைக்கவும். இதன் மூலம், டிக்டாக்கில் நீங்கள் பதிவிடும் வீடியோக்களை மற்றவர்களிடம் எளிதாக கொண்டு சேர்க்க இயலும்.
முடிந்தவரை, உங்களுடைய பாலோவரை அதிகரிக்க முயற்சி செய்யுங்கள். அதிக பாலோவர் இருப்பது தான் உங்களுடைய பலமாக இருக்கும். பெரும்பாலும், டிக்டாக் வீடியோக்களில் பிரபலமானவர்களுக்கு டிக்டாக் பணம் தருவது கிடையாது. அதே போல், அந்த வீடியோக்கள் மூலமும் பணம் கிடைக்காது. ஆனால், நீங்கள் டிக்டாக் பிரபலமாகிவிட்டால் போதும். மணமுள்ள பூவினை நோக்கி வண்டுகள் வருவது போல, ஸ்பான்சர்கள் வர ஆரம்பிப்பர்.
முதலில், 50 டாலரில் தான் தங்களுடைய ஸ்பான்சர்சிப்பினை ஆரம்பிப்பர். ஆனால், அது எங்கு சென்று முடியும் என்றுத் தெரியாது. எனவே, முடிந்த வரை தரமான, ஆபாசம் இல்லாத, அதே சமயம் கண்டன்ட் வீடியோக்களை வெளியிடுவதன் மூலம் நல்ல ஸ்பான்சர்களையும், விளம்பரங்களையும் உங்களால் பெற இயலும்.