இனி ஆன்லைனில் மட்டுமே மின் இணைப்புப் பெற இயலும்! எப்படி பெறுவது?

27 February 2020 அரசியல்
currentconnection.jpg

இனி வருகின்ற ஒன்றாம் தேதி, முதல் தமிழகம் முழுவதும் புதிய மின் இணைப்புப் பெற விரும்புபவர்கள், இணையத்தின் வாயிலாக மட்டுமேப் பெற இயலும் என, தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

வருகின்ற மார்ச் ஒன்றாம் தேதி முதல், தமிழகத்தினைச் சேர்ந்தவர்கள், புதிய மின் இணைப்புப் பெற விரும்பினால், tangedco.gov.in என்ற இணையத்திற்குச் சென்று, அங்கு குறிப்பிடப்பட்டுள்ள மின் வசதியினை பெற விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பத்தில் என்ன கேட்கப்பட்டு உள்ளதோ, அதனை விண்ணப்பித்த பின், மின் இணைப்பிற்குரிய கட்டணத்தினை ஆன்லைனில் செலுத்தலாம்.

அவ்வாறு, செலுத்திய பின், உங்களுக்கு பில் அனுப்பி வைக்கப்படும். அதனைத் தொடர்ந்து, விண்ணப்பித்த பத்தாவது நாளுக்குள் மின் இணைப்பு வழங்கப்படும் என, தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. மேலும், ஒரே நாளில் மின் இணைப்புத் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குடியிருப்புகளாக இருந்தாலும் சரி, அல்லது வணிகம் தொடர்பான இணைப்புகளாக இருந்தாலும் சரி, ஒரே நாளில் மின் இணைப்புப் பெறும் வசதியினையும் அறிமுகம் செய்துள்ளது.

மேலும், ஒரே நாளில் மின் இணைப்புப் பெற விரும்புபவர்கள், எவ்வளவு செலவு செய்ய வேண்டி இருக்கும் எனவும் பட்டியல் ஒன்றினை வெளியிட்டுள்ளது.

HOT NEWS