பணியாளர் பாஸ் பெறுவது எப்படி? ஒரு பார்வை!

04 May 2020 அரசியல்
tnepass.jpg

தமிழகத்தின் பல மாவட்டங்களில், கொரோனா வைரஸானது வேகமாகப் பரவி வருகின்றது. இதனால், வருகின்ற மே-17ம் தேதி வரை, ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டு உள்ளது. அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டும், அனுமதியுடன் பணிக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மேலும், பல விதி விலக்குகளையும் தமிழக அரசு அறிவித்து உள்ளது. இக்கட்டான சூழ்நிலைகள் மற்றும் அத்தியாவசியப் பணிகளுக்கு, மாநகராட்சி மற்றும் ஆட்சியாளர் அலுவலகங்களில், பாஸ் பெற்றுக் கொண்டு பணிக்குச் செல்லவும் அறிவுறுத்தப்படுகின்றது. இதற்கான வழிமுறைகளையும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

பெயிண்டர்கள், பிளம்பர்கள், எலக்ட்ரீசியன், தச்சு வேலை செய்பவர்கள், வீட்டு வேலை செய்யும் பணியாளர்கள் ஆகியோர், tnepass.tnega.org வலைதளத்தினைப் பயன்படுத்தி, தங்களுக்குரிய பாஸினை பெறலாம். இந்தப் பாஸினைப் பயன்படுத்தி, பொதுமக்கள் வெளியில் செல்லவும் அறிவுறுத்தப்படுகின்றது.

HOT NEWS