ஹோஸ்டனில் மோடிக்கு உற்சாக வரவேற்பளித்த அமெரிக்க இந்தியர்கள்!

22 September 2019 அரசியல்
howdymodi.jpg

ஏழு நாள் அரசு முறைப் பயணமாக, அமெரிக்கா சென்றுள்ளார் பாரதப் பிரதமர் திரு. நரேந்திரமோடி. அங்கு நடைபெற்றும், ஹோடி மோடி நிகழ்ச்சியில் பங்குபெறுகிறார்.

இதற்காக நேற்று முன்தினம், அமெரிக்கக் கிளம்பினார் மோடி. டெக்ஸ்சாஸ் நகரில் உள்ள ஹோஸ்டன் நகரினை நேற்று, பிரதமர் மோடி சென்றடைந்தார். அங்கு அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் பிரதமருக்கு உற்சாக, வரவேற்பு அளித்தனர்.

ஈரான் உட்பட, பல அரேபிய நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி வந்தது இந்தியா. தற்பொழுது பிரதமரின் இந்தப் பயணத்தின் காரணமாக, 4.3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதற்குப் பின், இனி நம் இந்திய நாட்டிற்கு, ஹோஸ்டனில் இருந்தும், கச்சா எண்ணெய் கிடைக்கும்.

அங்கு பிரதமரை, காஷ்மீரைச் சேர்ந்த பண்டிட்கள், சீக்கியர்கள் உட்பட பல இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் சந்தித்துப் பாராட்டியும், நன்றியும் கூறினர். காஷ்மீர் விவகாரத்தில், 7 லட்சம் காஷ்மீர் பண்டிட்கள் சார்பில், அங்கிருந்து காஷ்மீரிகள் தங்கள் நன்றியையும் கூறினர். தொடர்ந்து ஹோஸ்டனில் நடக்கும், ஹோவ்டி மோடி நிகழ்ச்சியில் பங்குபெறும் மோடி, பின்னர், அமெரிக்க அதிபர் டிரம்ப்பையும் சந்திக்க உள்ளார்.

HOT NEWS