5ஜி விரைவில்! ஹூவாய் ரஷ்யாவுடன் ஒப்பந்தம்!

18 June 2019 தொழில்நுட்பம்
5gphone.jpg

சீனாவின் அதிபர் ஜீ ஜிங்பிங் ரஷ்யாவிற்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்டிருந்தார். பின்னர், ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றினை, ஹூவாய் நிறுவனம் வெளியிட்டு இருந்தது.

5ஜி தொழில்நுட்பத்தை உருவாக்குவதில், ஹூவாய் நிறுவனம் அதி தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், ரஷ்யாவில் தன்னுடைய 5ஜி சேவையை, விரைவில் தொடங்க உள்ளதாம் ஹூவாய். ஹூவாய் நிறுவனம் ரஷ்யாவில் 31% வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது அவர்களின் எண்ணிக்கை மொத்தம் 78 மில்லியன் ஆகும்.

இந்நிறுவனம் ரஷ்யா மட்டுமின்றி, உலகின் பல பகுதிகளில் தன்னுடைய தகவல் தொழில்நுட்ப சேவையை வழங்கி வருகிறது. இந்நிலையில், 5ஜி சேவையை இந்த ஆண்டின் இறுதிக்குள் உருவாக்கிவிடும் என்பதால், இதனை இந்தியாவிலும் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது.

HOT NEWS