மொத்த இணையத்தினையும் குத்தகைக்கு எடுத்த டிரம்ப்!

16 August 2020 அரசியல்
donaldtrumpiran.jpg

அமெரிக்காவில் தேர்தல் நடைபெற உள்ளதை தொடர்ந்து, இணையத்தினை மொத்தாமாக குத்தகைக்கு எடுத்துவிட்டார் டொனால்ட் ட்ரம்ப்.

அமெரிக்காவில் வருகின்ற நவம்பர் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஜனாதிபதி பதவிக்காக, அமெரிக்காவின் தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்பும், ஜோ பிடனும் போட்டியிடுகின்றனர். இருவரும் ஒருவரை ஒருவர் கடுமையாக சாடி வருகின்றனர். இதனிடையே, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தேர்தல் வெல்வதற்கான யுக்திகளை ஏற்கனவேத் தொடங்கி விட்டார்.

ஏற்கனவே பல மாகாணங்களுக்குச் சென்று, அங்குள்ள தன்னுடைய ஆதரவாளர்களிடம் வாக்கு சேகரித்து வந்தார். தற்பொழுது தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், புதிய யுத்தியினை கையாண்டு உள்ளார். இணையத்தினை அமெரிக்கர்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர். இதனைப் பயன்படுத்தி, வாக்கு சேகரிக்கும் முயற்சியில் தற்பொழுது அவருடைய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இணையத்தில் விளம்பர வசதி வழங்குகின்ற அனைத்து நிறுவனங்களுக்கும், பெரும் தொகையினை அதிபர் டிரம்ப் கட்சியினர் வழங்கி உள்ளனர். இதனால், யூடியூப் தொடங்கி பல இணையதளங்களிலும், அமெரிக்காவில் டிரம்ப் பற்றிய விளம்பரங்கள் வரும் என்றுக் கூறுகின்றனர்.

HOT NEWS