பிரம்மாண்டமாக நடைபெற்ற பாஜக எம்எல்ஏ மகள் திருமணம்! ஒரு லட்சம் பேருக்கு அழைப்பு!

06 March 2020 அரசியல்
sriramaludahgtermarriage.jpg

கர்நாடகாவில் தான் இந்த மாதிரியான நிகழ்வு நடப்பது வழக்கம். இந்த முறையும் அப்படி ஒரு நிகழ்வு நடைபெற்றது. நேற்று நடைபெற்ற இந்த திருமணத்திற்காக சுமார் 500 கோடி ரூபாயானது செலவு செய்யப்பட்டு இருப்பதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

கர்நாடகாவின் பெரும் தொழிலதிபரான ஜனார்தன ரெட்டியின் சகோதரரும், ஆளும் கட்சி பாஜக எம்எல்ஏவும், சுகாதாரம் குடும்ப நலத்துறை அமைச்சருமான ஸ்ரீராமுலுவின் மகளுக்குத் தான் இப்படி ஒரு திருமண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவின் தொழிலதிபருக்கும், ஸ்ரீராமுலுவின் மகளுக்கும் நேற்று முறைப்படி திருமணம் நடைபெற்றது.

கடந்த பிப்ரவரி 27ம் தேதி, இவர்கள் திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தொடர்ந்து ஒன்பது நாட்கள் இவர்களுடைய திருமண விழா நடைபெற்றது. இந்த விழாவிற்காக ஒரு லட்சம் பேர் அழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. மேலும், கர்நாடகா முதல்வர் எடியூரப்பா, பாரதப் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்த திருமணத்திற்காக பிரம்மாண்டமான செட்டுகளும் போடப்பட்டன. திருமணத்திற்கு வருகைத் தரும் அனைவருக்கும், சைவ மற்றும் அசைவ உணவுகள் பரிமாறப்பட்டன. இந்த திருமணத்திற்காக, சுமார் 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக, எம்எல்ஏவிற்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த திருமணத்திற்காக போடப்பட்ட செட்டின் அளவு மட்டும் சுமார் 40 ஏக்கர் இருக்கும் என கூறப்படுகின்றது.

HOT NEWS