வெடி! ஆட்டம்! தீபாவளியாக மாறிய விழிப்புணர்வு! வைரல் புகைப்படங்கள்!

05 April 2020 அரசியல்
9pm9minutes.jpg

பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க, இந்தியா முழுவதும் பொதுமக்கள் வெளியில் வந்து விளக்கேற்றினர்.

கடந்த வாரம் வீடியோ பதிவின் மூலம், நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார் மோடி. அதன்படி, வருகின்ற மார்ச் 5ம் தேதி அன்று, இரவு ஒன்பது மணியளவில் வீட்டில் உள்ள விளக்குகளை அனைத்து விட்டு, கையில் அகல் விளக்கு அல்லது டார்ச் லைட்டினைப் பயன்படுத்தி ஒற்றுமையைக் காட்ட வேண்டும் என, வேண்டுகோள் விடுத்தார்.

இதனை முன்னிட்டு, இந்த விளக்கும் நிகழ்ச்சியானது நாடு முழுவதும் நடைபெற்றது. இதில், பலரும் தங்களுடைய வீட்டில் உள்ள விளக்குகளை அனைத்து, கையில் அகல் விளக்கினை ஏற்றினர். பலர், கையில் டார்ச் லைட்டினை பிடித்து சைகைகளை காட்டினர். ஒரு சிலர், வெடி, பட்டாசு முதலியவைப் போட்டு கொண்டாட ஆரம்பித்துவிட்டனர்.

விழிப்புணர்வுக்காக இந்த செயலை மோடி கூறினாலும், உண்மையில் ஒரு பத்து நிமிடம் தீபாவளியாக மாறிவிட்டது என்றுக் கூறலாம். நடிகர் ரஜினிகாந்த், துணை முதல்வர் ஓபன்னீர் செல்வம், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜேபி நட்டா, உட்பட பலரும் விளக்கினை ஏற்றி, தங்களுடைய ஆதரவினை தெரிவித்தனர்.

HOT NEWS