சென்னையில் மனிதச் சங்கிலிப் போராட்டம்! தமிழர் வேலைத் தமிழர்க்கே என முழக்கம்!

20 December 2019 அரசியல்
tamiljobsfortamils.jpg

தமிழகத்தில் வெளிமாநிலத்தவர்கள் அதிகமாக குடியேறுவதைக் கண்டித்தும், தமிழகத்தில் உள்ள அரசு வேலைகளை 90% தமிழர்களுக்கே வழங்க வேண்டி வலியுறுத்தியும், சென்னை சென்ட்ரல் நிலையத்தில் மனித சங்கிலிப் போராட்டம் நடைபெற்று வருகின்றது.

தமிழ் தேசியப் பேரியக்கம் தலைவர் மணியரசன் தலைமையில் இந்தப் போராட்டமானது, சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்திற்கு வெளியே நடைபெற்று வருகின்றது. இந்தப் போராட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். மனித சங்கிலிப் போராட்டமும் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்தில் பேசிய மணியரசன், தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் வேலைகளில் வெளி மாநிலத்தவர்களே அதிகம் வேலைப் பெறுகின்றனர். தமிழக இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. ஏற்கனவே, படித்த மாணவர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். இந்நிலையில், தொடர்ந்து வெளியூர் பொதுமக்கள் உள்ளூரில் வேலையில் அமர்வதால், வேலைக்காக கஷ்டப்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

மஹாராஷ்டிரா, குஜராத், ஆந்திரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் 90% அரசு வேலைகளை உள்ளூர் மக்களுக்கு வழங்கும் வகையில் சட்டங்கள் உள்ளன. ஆனால், தமிழகத்தில் அப்படி ஒன்றும் இல்லை. இது குறித்து, தமிழக முதல்வர் பழனிசாமியிடம் விரிவாக எடுத்துரைத்தோம். ஒரு பதிலும் இல்லை.

HOT NEWS