காவல்துறைக்கு மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு! எப்படி கைதிகள் வழுக்கி விழுகின்றனர்?

30 May 2020 அரசியல்
humanrights.jpg

அது எப்படி, எல்லா காவல்நிலையங்களிலும் உள்ள கழிவறைகளில், கைதிகள் மட்டும் வழுக்கி விழுகின்றனர் என, மனித உரிமைகள் ஆணையம் கேள்வி எழுப்பி உள்ளது.

சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலரான தேவேந்திரன் என்பவர் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்பொழுது, மதுவிலக்கு காவலர் நாதமுனி சோதனையில் ஈடுபட்டு உள்ளார். அவர் தேவேந்திரனின் வாகனத்தினையும் சோதனை செய்ததாகக் கூறப்படுகின்றது. இதனால், ஆத்திரம் அடைந்த தேவேந்திரன், நாதமுனியினைத் திட்டியுள்ளார். இதற்காக தேவேந்திரன் கைது செய்யப்பட்டார்.

இதில், கைது செய்யப்பட்ட தேவேந்திரன் அங்குள்ள காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்நிலையில், அங்குள்ள கழிவறையில் அவர் வழுக்கி விழுந்துவிட்டதாகவும் இதனால், அவருடைய வலது கையில் முறிவு ஏற்பட்டதாகவும் கூறப்படுகின்றது. இந்த விஷயத்தில் தற்பொழுது மனித உரிமைகள் ஆணையம் தலையிட்டது.

இது குறித்துக் கேள்விகளை எழுப்பியுள்ள ஆணையம், அது எப்படி தமிழகத்தில் உள்ள காவல்நிலையங்களில், கைதிகள் மட்டும் வழுக்கி விழுகின்றனர். அவ்வளவு அசுத்தமாக அந்தக் கழிவறைகள் இருந்தால், ஏன் காவலர்களுக்கு அடிபடவில்லை எனக் கேள்வி எழுப்பியுள்ளது. இது குறித்து, அம்பத்தூர் மதுவிலக்கு காவல்துறை உரிய பதிலை அளிக்க வேண்டும் என, உத்தரவிட்டு உள்ளது.

HOT NEWS