கொரோனா வைரஸிற்கு எதிரான தடுப்பு மருந்தானது, தற்பொழுது மனிதர்கள் மீது சோதனை செய்யப்பட உள்ளதாக பிரபல மருந்து தயாரிக்கும் நிறுவனமான எளி லில்லி தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸானது வேகமாகப் பரவி வருகின்றது. தற்பொழுது வரை 60 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு இந்த வைரஸ் பரவி உள்ளது. எனவே, இந்த நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகள் போட்டி போட்டு பரிசோதனை செய்து வருகின்றனர். இந்த வைரஸால் கிட்டத்தட்ட நான்கு லட்சம் பேர் பலியாகி உள்ளனர்.
இந்நிலையில், அமெரிக்காவின் எளி லில்லி என்ற நிறுனவம் தற்பொழுது புதிய அறிவிப்பினை அறிவித்துள்ளது. அதன்படி, அந்த நிறுவனம் இந்த வைரஸிற்கு மருந்து கண்டுபிடிப்பதற்காக அப்செல்லிரா பயோலாஜிக்ஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு வருகின்றது. கடந்த மார்ச் மாதம் முதல், இந்த வைரஸிற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது.
தற்பொழுது LY-CoV555 எல்ஓய்-கோவ்555 என்ற புதிய மருந்தினை உருவாக்கி உள்ளது. இந்த மருந்தானது தற்பொழுது மனிதர்கள் மீது சோதனை செய்யப்பட உள்ளதாக, அந்நிறுவனத்தினைச் சேர்ந்த விஞ்ஞானி தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், உலகளவில் தற்பொழுது 100க்கும் மேற்பட்ட கொரோனாவைரஸ் மருந்துகள் பரிசோதனையில் இருப்பதாக, உலக சுகாதார மையம் கூறியுள்ளது.
ஒருவேளை நாம் நம்முடைய மருந்தினை தயார்படுத்தி விட்டால், உலகம் முழுவதும் இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களை எளிதாகக் காப்பாற்ற இயலும். மேலும், இந்த நோயானது, பரவாமலும் தடுக்க இயலும் என்றுக் கூறியுள்ளார்.