மனிதர்கள் மீதான சோதனை வெற்றிகரமாக முடிந்தது! மருந்து நிறுவனம் அறிவிப்பு!

25 April 2020 அரசியல்
surgerylive.jpg

மனிதர்கள் மீதான கொரோனா வைரஸ் மருந்து சோதனையானது, முழுமையடைந்துள்ளதாக பயோன்டெக் நிறுவனம் கூறியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸானது, வேகமாகப் பரவி வருகின்றது. இதனால், இரண்டு லட்சம் பேர் மரணமடைந்துள்ளனர். இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல நாடுகள் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், இந்த வைரஸிற்கு மருந்து கண்டுபிடிக்க பல மாதங்கள் ஆகும் என, விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

இதற்கிடையில் உலகளவில் பிரசித்திப் பெற்ற நிறுவனமான, பயோன்டெக் நிறுவனம், ஜெர்மனியில் மனிதர்கள் மீது, முதற்கட்டமாக கொரோனா வைரஸ் மருந்தை சோதனை செய்துள்ளது. இது குறித்து, ஜெர்மனி சுகாதாரத்துறை அமைச்சர் ஜென் ஸ்பான்ஸ் பேசுகையில், இது நல்ல முடிவு என்றுக் கூறினார். பொதுவாக, மருந்து கண்டுபிடிக்கவே பல மாதங்கள் ஆகின்ற நிலையில், தற்பொழுது வேகமாக மருந்து உருவாக்கப்பட்டு உள்ளது.

இந்த மருந்தானது, 18 முதல் 55 வயதிற்குட்பட்ட ஆரோக்கியமான நபர்கள் மீது சோதனை செய்யப்பட்டது. 200 நபர்கள் இந்த சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த சோதனையின் முடிவினை அடுத்து, அடுத்தக் கட்டமாக, இக்கட்டான சூழ்நிலையில் உள்ள மனிதர்கள் மீது, சோதனை நடத்தப்படும் என்றுக் கூறினார். அமெரிக்கா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள், இந்த வைரஸிற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இரண்டு நாடுகளுமே, ஏற்கனவே மனிதர்கள் மீது தாங்கள் உருவாக்கிய மருந்துகளை சோதனை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS