புற்றுநோய் மனைவியை சைக்கிளில் கொண்டு வந்த கணவன்! கண்ணீர் பேட்டி!

11 April 2020 அரசியல்
coronacancer.jpg

120 கிலோமீட்டர், தனது மனைவியினை சைக்கிளிலேயே அமர வைத்து அழைத்த சென்ற சம்பவம், நெகிழ்ச்சியினை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது அமலில் உள்ளது. இதனால், பொதுமக்கள் வெளியில் நடமாடவில்லை. பொதுப்போக்குவரத்தும் நிறுத்தப்பட்டு உள்ளது. ஆம்புலன்ஸ் வசதி உள்ளிட்ட ஒரு சில வாகனங்களே இயக்கப்படுகின்றன. இந்நிலையில், கும்பகோணம் பகுதியினைச் சேர்ந்தவர் அறிவழகன். 65 வயதான இவர், தன்னுடைய 60 வயது மனைவி மஞ்சுளாவினை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்துள்ளார்.

புற்றுநோயாளரான மஞ்சுளா, திடீரென்று நோயால் அவதிப்பட்டு உள்ளார். இதனை தாங்காத அறிவழகன், ஆம்புலன்ஸ் கிடைக்காத காரணத்தினால், தன்னுடைய மனைவியினை சைக்கிளிலேயே அமர வைத்து 120 கிலோ மீட்டர் அழைத்து சென்று, புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்து உள்ளார்.

இவர் சைக்கிளில் அவருடைய மனைவியினை அமர வைத்து, கொண்டு வருவதைப் பார்த்த மருத்துவமனை ஊழியர்கள் இவரிடம் விவரம் கேட்டனர். இவர் நடந்ததைக் கூறவும், அவருடைய மனைவி மஞ்சுளாவினை அழைத்துச் சென்ற மருத்துவர்கள், தொடர்ந்து மூன்று நாட்கள் சிகிச்சை அளித்துள்ளனர். அதே சமயம், அறிவழகனுக்குத் தேவையான உணவு உள்ளிட்டப் பொருட்களையும் வழங்கி உள்ளனர்.

பின்னர் சிகிச்சை முடிந்து வீடு கிளம்ப நினைத்தவரை, அந்த மருத்துவமனையில் இருந்த ஆம்புலன்சில் ஏற்றி, அவரையும் அவருடைய மனைவியையும் வீட்டில் சேர்த்துள்ளனர். இந்த சம்பவம், தற்பொழுது பெரும் அளவில் பேசப்பட்டு வருகின்றது.

HOT NEWS