ஊரடங்கு நேரத்தில் சரக்கு ஊற்றித் தரும் நபர்கள்! டிக்டாக்கில் வைரலாகும் வீடியோ!

14 April 2020 அரசியல்
hyderabadliquor.jpg

இந்தியா முழுவதும் வருகின்ற மே-3ம் தேதி வரை, ஊரடங்கு உத்தரவானது அமலில் உள்ளது. இதனால், பொதுமக்கள் வெளியில் தேவையில்லாமல் வருவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், டிக்டாக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில், இருவர் பொதுமக்களுக்கு சாராயம் ஊற்றி தருகின்றனர். இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த நபர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

சஞ்சு மற்றும் நிதின் என்ற இருவரும், தாங்கள் வைத்திருந்த சாராயத்தினை தெருவில் அமர்ந்திருக்கும் பொதுமக்களுக்கு ஊற்றித் தருகின்றனர். அதனை ஒரு சிலர் வாங்கிப் பருகவும் செய்கின்றனர். இந்த வீடியோவானது வைரலானதால், இந்திய செய்தி மற்றும் தகவல் தொடர்பு அமைப்பின் கவனத்தினையும் பெற்றது.

இதனைத் தொடர்ந்து அதன் அறிவுரைப்படி, அவர்கள் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க அமைச்சர் வீ ஸ்ரீநிவாச கௌடா ஆணையிட்டார். ஹைதராபாத் போலீசார், அந்த இருவரையும், ஐபிசி செக்சன் 34 ஏ விதியின் படி, கைது செய்தனர். இது தற்பொழுது பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.

HOT NEWS