நான் தற்பொழுது பெயருடனும், புகழுடனும் நன்றாக வாழ்வதற்கு, கே பாலச்சந்தர் அவர்களேக் காரணம் என, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
மறைந்த இயக்குநர் கே பாலச்சந்தரின் 90வது பிறந்தநாளை முன்னிட்டு, அவருடைய வாழ்க்கை குறித்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், தன்னுடைய வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், நான் நன்றாக வாழ்வதற்கும், புகழ் மற்றும் வசதியுடன் வாழ முக்கியக் காரணமாக இருந்தவர் கே பாலச்சந்தர். அவர் என்னிடம் இருந்த பிளஸ் பாய்ண்ட்களை வெளிக் கொண்டு வந்தவர். மைனஸ் பாயிண்ட்டுகளை எல்லாம் நீக்கியவர்.
நிறைய கலைஞர்கள், நடிகர்கள் எனப் பலரை உருவாக்கியவர். சூட்டிங்கில் மூலையில் நின்று வேலை செய்யும் கலைஞர்களுக்கும் எழுந்து நின்று வணக்கம் சொல்பவர். அவ்வளவு கம்பீரமாக இருப்பார். அவர் தன்னுடையக் காலத்தில், நல்ல மனிதராக, நல்ல தந்தையாக, நல்ல இயக்குநராக, நல்ல குருவாக விளங்கினார். இன்னும் அவர் நிறைய நாட்கள் வாழ்ந்திருக்கலாம். அவரைப் பற்றி நினைவுக் கூறுவதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன் என்று அவர் கூறியுள்ளார்.